சிராந்தி ராஜபக்ச வழங்கிய பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளார் ரவிசங்கர்

srisriravi
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமக்கு இலங்கையின் மருத்துவத்துறை, சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் (OIUCM) வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகம் எந்த ஒரு சட்ட அங்கீகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டமையை அடுத்தே ரவிசங்கர் இதனை முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலாநிதி பட்டத்தை இலங்கையின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கினார்.

எனினும் இந்திய ஊடகத்தின் செய்தியை அடுத்து தாம் குறித்த கலாநிதி பட்டத்தை குறித்த நிறுவனத்துக்கு திருப்பி வழங்கப் போவதாக வாழும் கலை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பட்டம் ஆன்மீகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

TPN NEWS