போதைப் பொருள் கடத்தல்களும் பாதுகாப்பு செயலாளரின் அனுமதிடன் அரங்கேறுகின்றன-முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

85

சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் எடுத்து வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவதால் சர்வாதிகாரம் மேலோங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று (25.08.14) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் உihயாற்றிய சரத் பொன்செகா தேர்தல் திணைக்களம் உட்பட அனைத்து முக்கியமான அரச நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
ஊழல் மோசடி மலிவடைந்துள்ளது. குடு வியாபாரமும் போதைப் பொருள் கடத்தல்களும் பாதுகாப்பு செயலாளரின் அனுமதிடன் அரங்கேறுகின்றன. போதைப் பொருள் வியாபாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் நின்று படம் எடுக்கின்றனர். ஊழல் மோசடி பற்றி பேசினால் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
ஆனாலும் இந்த சர்வதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் காலம் வந்துவிட்டது. நாட்டில் நீதியில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள். ஊவா மாகாண சபைத் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று சரத் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டார்.

SHARE