கவர்ச்சி காட்டுவதற்காகவே நடிக்கக்கூடாது-அங்கனா ராய் 

78

  ‘வத்திக்குச்சி’, ‘ரகளபுரம்’, ‘கபடம்’ ஆகிய படங்களில் நடித்தவர், அங்கனா ராய். அவர் கூறியதாவது:நான் தமிழில் தெளிவாகப் பேசுவேன் என்பதால், தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ‘மகாபலிபுரம்’, ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படங்களில் நடிக்கும் நான், கன்னடத்தில் துனியா விஜய்யுடனும், மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்ஷனில் பிருத்வி ராஜுடனும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அடிப்படையில் நான் பெங்காலி.

இப்போது பெங்காலிப் படத்திலும் அறிமுகமாகிறேன். என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவும் கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். ‘மேகா’ படத்தில் நர்ஸ் வேடம். ஆக்டிங் ஸ்கோப் இருந்ததால், அது சின்ன கேரக்டராக இருந்தபோதும் தயங்காமல் நடித்தேன். படத்தின் கதை வற்புறுத்தினால் மட்டுமே கவர்ச்சியாக நடிப்பேன். அதுவும் ஆபாச எல்லையைத் தொடாமல், அழகியல் நோக்கத்துடன் படமாக்கப்பட வேண்டும். படத்தில் ஏற்கும் ஒவ்வொரு கேரக்டரிலும், ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கம் மட்டுமே இருக்கும். கவர்ச்சி காட்ட வேண்டும் என்று சினிமாவில் நடிக்க வரவில்லை. அதுபோல் யாரும் வரவும் கூடாது.

 

SHARE