உலக மக்களின் மனதை உருக வைத்த 7 வயது சிறுமி

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கின்றனர், இதன் போது பலியாகும் நபர்கள் ஏராளம்.

சிறுவன் அய்லானை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது, அகதிகளின் நிலையை உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது அவனது மரணம்.

இந்நிலையில் கிழக்கு அலெப்போவை சேர்ந்த 7 வயது சிறுமி Bana Alabed-ன் டுவிட்கள் வைரலாக பரவி வருகிறது.

கிழக்கு அலெப்போவில் குண்டுகள் போட்டபோது, தன்னுடைய வீடு முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும், மரணத்தின் வாசல் வரை சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகைமண்டலமாக காட்சியளிக்கும் இடத்தில் நிற்கும் சிறுமியின் புகைப்படம் மக்களின் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.

cys4pwtweaaziaf