ஹிலாரி கிளிண்டனுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்ப் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் வெற்றி பெற்றால் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பாக அவரை சிறையில் அடைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஹிலாரி கிளிண்டன் மீது வழக்கு பதிவு செய்யும் எண்ணம் இல்லை என டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகள் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.

அதில், ‘ஹிலாரி கிளிண்டனின் அறக்கட்டளை மூலமாக பெறப்பட்ட நிதியுதவிகள் மீது விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெளிநாடுகளிலிருந்து அறக்கட்டளை மூலமாக ஹிலாரிக்கு முறைக்கேடாக நிதி வந்துள்ளதா இல்லையா என அந்நாடுகளின் அரசு விசாரணை நடத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக, ஹைதி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கில் ஹிலாரியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி கிடைத்துள்ளதால் இவற்றை அனைத்தையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னஞ்சல்கள் விவகாரம் தீர்வாகாத நிலையில் தற்போது அறக்கட்டளை விவகாரம் மீது விசாரணை என வெளியாகியுள்ள தகவல் ஹிலாரிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

160510183336-hillary-clinton-benghazi-hearing-2015-restricted-super-169