பிரித்தானிய பிரதமர் உருக்கமான பேச்சு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பான விவகாரங்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் நித்திரை இல்லாமல் தவித்து வருவதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே உருக்கமாக பேசியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக வேண்டும் என அந்நாட்டு குடிமக்கள் வாக்களித்ததை தொடர்ந்து முன்னாள் பிரதமரான கமெரூன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகினார்.

கமெரூனிற்கு பிறகு பிரதமராக பதவி ஏற்றுள்ள தெரசா மேவிற்கு உள்ள மிகப்பெரிய சவால் இந்த பிரிவினையும், இதனால் ஏற்படும் விளைகளை எதிர்கொள்வது தான்.

சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான விவகாரங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்த சவாலை எதிர்க்கொள்ள ஒவ்வொரு நாளும் நித்திரை இல்லாமல் தவித்து வருகிறேன். சில மணி நேரம் மட்டும் நித்திரை கொள்ள நேரம் கிடைக்கிறது.

ஆனால், கிறித்துவ மதத்தின் மீதும் கடவுளின் மீதும் உள்ள நம்பிக்கை தான் என்னை அனைத்து சவால்களையும் எதிர்க்கொள்ள தயார் படுத்தி வருகிறது.

எனினும், எனது முழு எண்ணமும் திட்டங்களும் பிரித்தானிய குடிமக்களின் நலனை மையமாக வைத்து தான் உள்ளது’ என தெரசா மே உருக்கமாக பேசியுள்ளார்.