7 நாட்களில் 5 கிலோ குறைந்தால் எப்படியிருக்கும்?… சீக்கிரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க!..

weight_loss_002-w245

உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு டயட் வழிமுறைகள் இருந்தாலும், அனைத்துமே நமக்கு உடனடி தீர்வை அளித்துவிடுவதில்லை.

அதனால், செயற்கையான முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இயற்கையான முறையிலேயே பானங்களை தயாரித்து உடல் எடையை குறைக்கலாம். 7 நாட்களில் 5 கிலோ குறைக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.

பொதுவாக சுடுநீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். ஒருவர் தினமும் சாதாரணமாக சுடுநீரைக் குடித்து வந்தாலே, உடலில் இருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

தேவையான பொருட்கள்

பட்டை தூள் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், நீர் – 1 பெரிய டம்ளர், எலுமிச்சை சாறு – சிறிது

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலக்க வேண்டும். பின் நீர் வெதுவெதுப்பான நிலையில் வந்ததும், தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என ஒரு வாரம் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும். இந்த பானம் உங்களுக்கு நல்ல தீர்வை வழங்கும்.