இன்றைய ராசி பலன்- உங்களுக்கு நாள் எப்படி?

rasi_17079

மேஷம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும். குடும்பத்தினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

மிதுனம்

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

கடகம்

சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

சிம்மம்

இனிமையான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

கன்னி

சிறப்புகள் வந்து சேர சிக்கனத்தைக் கடைபிடிக்கும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.

துலாம்

கேட்ட இடத்தில் உதவிகள்கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

விருச்சிகம்

முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்

தனுசு

நன்மைகள் வந்து சேரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம்.ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.

மகரம்

செல்வநிலை உயரும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பயணம்பலன் தரும்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். கருத்து வேறுபாடுகள்அகலும்.

மீனம்

தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். விட்டுப் போன விவாகப் பேச்சுக்கள் மீண்டும் வந்து சேரலாம். நிதிநிலைஉயரும்.

– See more at: http://www.manithan.com/news/20161129123114#sthash.b08GKcFe.dpuf