சுவாமி நடராஜானந்தாவின் 113வது ஜனனதின விழா

காரைதீவு பெற்றெடுத்த சேவையின் சின்னம் இ.கி.மிசன் சுவாமி நடராஜானந்தாவின் 113வது ஜனனதினம் இன்று (29) செவ்வாய்க்கிழமை காரைதீவில் கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக முன்றலிலுள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன் போது அன்பர்கள் மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்தோடு மாணவர்கள் பஜனை பாடியதுடன், செயலாளர் கு.ஜெயராஜி மங்களாரதி காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

625-0-560-320-160-600-053-800-668-160-90-1