வேறு கோள்களில் இருந்து ஒலியா? மக்களின் உதவியை நாடும் விஞ்ஞானிகள்

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

விஞ்ஞானிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கும் இயற்கையின் படைப்புக்களில் ஒன்றாக அண்டவெளி விளங்குகின்றது.

அண்டவெளியில் காணப்படும் பல பில்லியன் கணக்கான வான் பொருட்களில் சிலவற்றினைப் பற்றியே இதுவரை கண்டறிந்துள்ளனர்.

இதேவேளை கோள்கள் மற்றும் அவற்றின் சந்திரன்களில் (உபகோள்) இருந்து ஒலிகள் வெளியாவது தொடர்பில் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இவ் ஒலி அலைகள் வளி மண்டலத்தை நோக்கி அல்லது சமுத்திரங்களை நோக்கி கடத்தப்படலாம் என விஞ்ஞானிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் அனேகமான கிரகங்களில் வளி மண்டலம் இல்லை எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஒலி எவ்வாறு வெற்றிடத்தில் கடத்தப்படுகின்றது? அவ் ஒலிகள் எங்கிருந்து பிறப்பிக்கப்படுகின்றன?

அவை வேறு பூமியில் பிறப்பிக்கப்படும் வேறு ஒலிகளை ஒத்தனவா? என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ் ஆய்வில் மக்களின் உதவியும் நாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்