ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன்: வேலை செய்யும் அதிசயம்!

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

அமெரிக்காவில் ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன் இன்னும் வேலை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் Michael Guntrum என்பவர் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உறைபனி ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தனது ஐபோன் 4ஐ தவறி ஏரியில் போட்டுள்ளார்.

Michael கூறுகையில், -25 டிகிரிக்கும் குறைவான அந்த சூழ்நிலையில் நானும், எனது நண்பனும் உறைபனி ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிந்தோம்.

அப்போது மீன் பிடிக்க தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் எனது போன் விழுந்துவிட்டது. ஆனால் அதை என்னால் மீட்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த ஐபோன் வேறொருவர் கையில் சிக்கியுள்ளது. Daniel Kalgren என்பவர் தான் இந்த போனை கண்டுபிடித்துள்ளார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரான Daniel Kalgren தன்னுடைய metal detectorஐ பயன்படுத்திய போது களிமண்ணுடன் 6 ஆடி ஆழத்தில் இந்த ஐபோனை கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்து, 2 நாட்கள் அரிசியில் வைத்துள்ளார். தற்போதும் அந்த போன் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

Daniel கூறுகையில், நான் ஆன் செய்தவுடன் போன் ஆன் ஆகிவிட்டது. அதில் போனின் உரிமையாளரின் நம்பர் இருந்தது. அவரிடம் இதை திருப்பிக் கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.