நாடாளுமன்ற வளாகத்தில் கடும் வாகன நெரிசல்

பத்தரமுல்லை நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டுனர்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.