நீராடச் சென்ற இளைஞர் மாயம்

ஹம்பாந்தோட்டை – சமகிபுர கடற்கரையில் நேற்று(29) மாலை நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் 19 வயதானவர் என்றும் சமகிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடலில் நீராடிக் கொண்டிருந்த போது, இரு இளைஞர்கள் இவ்வாறு அலையில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் தப்பி கரைக்கு வந்துள்ளார்.

இதற்கு முன்னரும் அந்த இடத்தில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.