தெல்தோட்டை தோட்டக்காணி தனியாருக்கு வழங்கப்பட கூடாது 

தெல்தோட்டை லிட்டில்வெளி தோட்டக்காணி தனியாருக்கு வழங்கப்பட கூடாது என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேண்டுகொளுக்கு, அரச பொது முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சரான கபீர் ஹசீம் தீர்வு வழங்கநடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் போது, தெல்தொட்டை லிட்டில்வெளி தோட்டம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குரியதாகும் (JEDP). அந்நிறுவனம் விடுவித்தால் மட்டுமே வெளியாருக்கு காணியை பெற்றுக் கொடுக்க முடியும்.

அதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட மாட்டது எனவும், அத்துடன் இந்த விடயம் தொடர்பில் காணியமைச்சு உடனடி தீர்வு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கபீர் ஹசீமால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த காணி பிரச்சினை தொடர்பான விடயத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனும், பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.