யாராவது தாய் மண்ணை விட்டு செல்வார்களா? தங்கமகனின் சூடான பதில்

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்கமகன் மாரியப்பன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, பெங்களூருவில் சென்று செட்டில் ஆக முடிவு செய்திருப்பதாகவும் அவரது, கோச் சத்திய நாராயாணாவின் அறிவுரையின் பெயரில் அங்கேயே குடியேறிவிடப் போவதாக தகவல் கசிந்தது.

மேலும் எதிர்காலத்தில் தேசிய அளவிலானப் போட்டிகளில் கர்நாடாக மாநிலத்துக்காக கலந்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாரியப்பன், ”யாராவது தாய் மண்ணை விட்டு விட்டு வெளியேறி வேறு மாநிலத்துக்காக விளையாடுவாங்களா?. எனக்கு ஊக்கமும் வாய்ப்பும் அளித்தது இந்த மண்தான்.

தற்போது விழாக்களில் பங்கேற்று வருவதால், என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த இடைவெளியில் தான் வதந்திகளை பரப்பியுள்ளனர் என கூறியுள்ளார்.

லண்டனில் நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ரிக்கார்ட் படைத்து தங்கம் வெல்ல வேண்டும். அதனை இலக்காக கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன்.

இதில், தங்கம் வெல்வதே எனது இலக்கு என்பதால், அதற்கான பயிற்சியை பெங்களூரில் மேற்கொண்டு வருகிறேன். அதனால் இப்படி ஒரு வதந்தி வெளியாகியிருக்கலாம் என கூறியுள்ளார்.