தவறான நடத்தை..! மான்செஸ்டர் கால்பந்து அணி மேலாளருக்கு நெருக்கடி!

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

பிரித்தானியாவின் பிரபல கால்பந்து கிளப் அணி மேலாளர் மைதானத்தில் தவறாக நடந்துக்கொண்டதாக கால்பந்து கூட்டமைப்பு குற்றம் சாட்டி விளக்கம் கேட்டுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளரான Jose Mourinho மீதே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Old Trafford மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – West Ham அணிகள் மோதிய போட்டி 1-1 கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

போட்டியின் போது மான்செஸ்டர் யுனைடெட் அணி மேலாளர் கோபத்தில் தண்ணீர் பாட்டிலை உதைத்துள்ளார். இதைக்கண்ட போட்டியின் நடுவர் அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.

இந்நிலையில், தவறான நடத்தை குறித்து Jose Mourinho எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என கால்பந்து கூட்டமைப்பு கோரியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டியின் போது தவறாக நடந்து கொண்டதிற்காக Jose Mourinho மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவருக்கு ஒரு போட்டியில் தடை மற்றும் 8000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.