மட்டக்களப்பில் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய அங்கத்தவர்கள் இணைவு

ட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும் கூட்டம் நேற்று(28) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் சங்க உறுப்பினர்கள் என பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளனர்.

அத்தோடு அவர்கள் புதிய உறுப்புரிமையை வேலுப்பிள்ளை மகேஸ்வரனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் குறித்த கட்சியின் மட்டக்களப்பு மாவட்டஇணைப்பாளர் மொகமட் சாபி, மாவட்ட முகாமையாளர் வி.கே.லிங்கராசா, காத்தான்குடி மத்திய குழு தலைவர் கே.எ.எ.அலிஸ் போன்றோரும் பங்குபற்றினர்.

மேலும் மாவட்ட மீனவ சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90