யாழில் வங்கி ஊழியர் திடீர் மரணம்!

banker

குளிர் காலத்தில் ஏற்பட்ட கடுமையான சுவாச நோய் (ஆஸ்துமா) காரணமாக இளம் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் சங்கானை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த விமலேந்திரன் கவிதன் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

நேற்று மாலை சுவாசிப்பதற்கு கடுமையாக சிரமப்பட்ட குறித்த இளைஞன் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலமானது பிரதேச பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.