முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பயிற்சியினை நிறைவு செய்த மூவர் இன்று(29) காலை 10 மணியளவில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் பல கைத்தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்த 10 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் அஜித் குமார (கொழும்பு) மற்றும் சிங்கராசா எட்மன்(திருகோணமலை), செல்வரட்ணம் சிறீதரன்(வவுனியா) ஆகியோர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள இளைஞர் ஒருவரும் முன்னாள் விடுதலைப்புலிகளில் இணைந்து செயற்பட்டிருந்ததினால் ஆறுமாத கால புனர்வாழ்வின் பின்னர் இன்றைய தினம் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்டுகின்றது.

இதேவேளை, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று பன்னிரண்டாயிரம் பேர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும் இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், பூந்தோட்டம் புனர்வாழ் நிலையப் பணிப்பாளர் லெப்.கேணல்.எம்.ஏ.ஆர்.கமில்டோன், நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர, பின்னாய்வு நிலைய பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11