வடக்கு முதல்வரை குறிவைக்கும் தென்னிலங்கை – தமிழர் வரலாற்றையே மாற்ற திட்டம்..!!

cv-w-250x242

அண்மைக்காலமாக பிக்குகள் நாட்டில் குழப்ப நிலையை உருவாக்கி வருகின்றனர் என்பது வெளிப்படையானதொரு விடயமே.

எதனை பூதாகரமாக மாற்றினால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதனை அறிந்து சாதூர்யமாக செயற்பாடுகளை நகர்த்தி வருகின்றனர் பிக்குகள். ஆனாலும் இவர்களுக்கு அரசியல் பலம் இருக்கின்றமை தெரிந்த விடயம் தான்.

சிவனொளிபாதமலையை காரணம் காட்டி கலவரத்தை உண்டுபண்ண நடைபெற்ற முயற்சி ஓரளவாக தடுக்கப்பட்டது. இது ஆரம்பம் இல்லை அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தமது போர்க் கொடியினை தூக்கிவிட்டார்கள் என்பதே உண்மை.

ஏற்கனவே வடக்கு முதல்வர் மீதான கடுமையான எதிர்ப்புகளை இவர்கள் வெளிப்படுத்திய சமயம் தனக்கு உயிர் அச்சுருத்தல் இருப்பதாகவும் வடக்கு முதல்வர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் வடக்கு முதல்வர் மீதான பார்வை சிறிது திசைதிரும்பியது என்றே கூறவேண்டும். தற்போது பிக்குகளின் விமர்சனங்களின் மீண்டும் வடக்கை நோக்கி திரும்பி விட்டது.

நேற்றைய தினம் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சந்தாதிஸ்ஸ ஹிமி கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு முதல்வருக்கு, வடக்கில் விகாரைகள் எழுப்பப்படக் கூடாது என தெரிவிக்க எந்தவிதமான உரிமையும் இல்லை, அவர் பிறக்கும் முன்னரே வடக்கில் விகாரைகள் கட்டப்பட்டு விட்டன.

வடக்கில் விகாரைகளின் வரலாறுகள், அமைக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் பட்டியல் இட்டு தொல்பொருள் ஆய்வு நிலையம் விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோன்று வடக்கு விகாரைகளுக்கு பூரண பாதுகாப்பு அளிப்போம் எனவும் உறுதியளிக்க வேண்டும். உங்களுக்கு 3வாரம் மட்டுமே கால அவகாசம்.

அப்படி செய்யாவிடின் தொல்பொருள் ஆய்வு திலையத்தை சுற்றி முற்றுகையிடுவோம் என கடுமையான தொணியில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரின் கருத்துகள் வடக்கின் வரலாற்றோடு எந்தவகையிலும் ஒத்துப்போகாது என்பதே உண்மை, ஆனாலும் இவ்வாறானதொரு கருத்தை அவர் முன்வைத்தது மட்டும் புதுக் குழப்பத்திற்கான அத்திவாரமே என கூறப்படுகின்றது.

அதேபோன்று இப்போதைய ஆட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் விக்னேஸ்வரனுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்கள் தானாக சித்தரிக்கப்பட்டவை மட்டுமே ஆனாலும் வடக்கு தொடர்பிலான பார்வை யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் இருந்து தொடர்ந்து வருகின்றது.

அண்மையில் வவுனியாவில் போராட்டம் மேற்கொண்ட பிக்குகள் அடுத்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் மேற்கொள்வோம், யாருக்கும் பயம் இல்லை என எச்சரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

வடக்கை பௌத்த மயமாக்குவது மட்டுமே ஒரே குறிக்கோளாக கொண்டு காய்நகர்த்தி வரும் பிக்குகளோடு சேர்ந்து கடும் போக்கான அரசியல்வாதிகள் சிலரும் தற்போது விக்னேஸ்வரனை குறிவைத்து விட்டனர்.

மட்டக்களப்பு ஒன்றுகூடல் எவ்வாறான பிரதிபளிப்பினைத் தரும் என்பது 3ஆம் திகதிக்கு பின்னரே வெளிப்படுத்தப்படும் இந்த நிலையில் வடக்கு முதல்வரும் சிக்கி விட்டார்.

முஸ்லிம்களை அழிப்போம் எனப்புறப்பட்ட பிக்குகள் திடீரென அணைந்து போய் விட்டனர் ஆனாலும் அந்த நெருப்பு இன்றும் புகைவிட்ட வாரே இருக்கின்றது எந்த நிலையில் பற்றிவிடும் வகையில் தயார் நிலையிலேயே உள்ளது.

அதேபோன்று தமிழர்களுக்கு எதிராகவும் தற்போது சதிகள் தீட்டப்பட்டு வருகின்றது என்றே கூறவேண்டும். வடக்கில் கலாச்சாரத்தை மட்டும் நம்பிவாழும் தமிழர்களிடையே வேறு சமயத்தை திணிப்பதன் ஊடாக இலகுவாக கலவரத்தை ஏற்படுத்தி விட முடியும் என்பதே அவர்கள் திட்டம்.

இல்லாவிடின் இலங்கையின் வரலாற்றையே மாற்றியமைக்கும் வகையில் அவர்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதன் காரணமாகவே பிக்குகள் தற்போது வடக்கையும் வடக்கு முதல்வரையும் குற்றவாளிகளாக சித்தரித்து வருகின்றனர்.

அரசு இனியும் பொறுமைகாத்துக் கொண்டிருக்குமானால் மீண்டும் பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக நெருப்பில் ஊற்றிய பெற்றோலாக மாறி விடுவார்கள்.

அதேபோன்று சகோரத இனத்தவர் நெஞ்சத்திலும் அன்றாடம் விதைக்கப்பட்டு வரும் இனவாத நெருப்பு நாட்டையே பற்றி எரிய வைக்கும் என்பதே இப்பேதைய நிலைமை எனவும் கூறப்படுகின்றது.