கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்

1346029171water350-415x260

கொழும்பில் பல பகுதிகளில் நாளை முதல் 07 மணித்தியாலங்களிற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று அறிவித்துள்ளது.

நாளை இரவு 10 முதல் 07 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரகஸ்முல்ல,ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர மற்றும் கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜகிரிய பகுதியிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.

நீர் வழங்கள் சபையில் மேற்கொள்ளவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படுவதால் தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.