தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடவில்லை-பைசர் முஸ்தபா

faizer-mustapha

தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடவில்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை.

தற்போது எல்லை மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான அறிக்கை நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.