இறுதிவரை போராட வேண்டுமென்பதே மாவீரர்களின் இறுதி மூச்சு வரை இருந்த நினைவு

625-117-560-350-160-300-053-800-210-160-90

விடுதலைக்காய் இறுதிவரை போராட வேண்டுமென்பதே மாவீரர்களின் இறுதி மூச்சு வரை நினைவாக இருந்துள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.

நியூயோர்கில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நாம் எமது இதய கோவிலில் பூசிக்க வேண்டிய நாளே இந்த மாவீரர் தினம்.

மாவீரர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றை தாண்டினார்கள். புயலை வாயால் ஊதினார்கள். காற்று போக முடியாத பகுதியில் கூட நுழைந்து பகையை அழித்தார்கள்.

திட்டமிடப்பட்ட இன அழிப்பிலிருந்து எமது இனத்தை பாதுகாத்து எமது கௌரவமான இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவதற்காகவே மாவீரர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும்..