வவுனியா உணவகத்தில் தீ விபத்து! ஒருவர் பாதிப்பு

 

வவுனியா மணிக்கூட்டுச் சந்திக்கு அருகே அமைந்திருக்கும் பிரபல்யமான உணவகம் ஒன்றில் இன்று(29) 2.00 மணியளவில் திடீரென தீ பற்றியுள்ளது.

குறித்த உணவகத்தின் சமையல் அறையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு சிறு எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12