பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்

செங்கலடி பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று(29) இடம்பெற்றுள்ளது.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் புகலிடம் பாடசாலை ஏற்பாட்டில் மெதடிஸ் திருச்சபயிலிருந்து ஆரம்பமாகி செங்கலடி சந்தை முன்பாக நிறைவடைந்துள்ளது.

செங்கலடி சந்தை முன்பாக பெண்கள் வன்முறைக்குட்படுத்தப்படுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வீதி நாடகமும் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தெடர்பான பதாதைகளை ஏந்தியவாரு இந்த விழிப்வுணர்வு ஊர்வலத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-23 625-0-560-320-160-600-053-800-668-160-90-24 625-0-560-320-160-600-053-800-668-160-90-25 625-0-560-320-160-600-053-800-668-160-90-26