இன்றைய ராசி பலன்- உங்களுக்கு நாள் எப்படி?

raasipalan_001-w245

மேஷம்

கனிவாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.

ரிஷபம்

நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரம் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

கடகம்

பிரச்சினைகள் தீரும் நாள். வரவு திருப்தி தரும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

சிம்மம்

நினைத்தது நிறைவேறும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

கன்னி

பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும் நாள். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வருமானங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.

துலாம்

வளர்ச்சி கூடும் நாள். தாய்வழி ஆதரவு உண்டு. பூர்வீகச் சொத்துக்களால் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. மாலைநேரம் மனதிற்கினிய செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் திருப்தியளிக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

தனுசு

யோகமான நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி கைகூடும்.

மகரம்

திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

கும்பம்

புகழ்கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. குடும்ப பொறுப்புகள் கூடும். மன அமைதிக்காக மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளைச் சொல்வீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர்.

மீனம்

அலைபேசிவழித் தகவல் அனுகூலம் தரும் நாள். சொன்ன சொல்லைக்காப்பாற்றுவீர்கள். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்

– See more at: http://www.manithan.com/news/20161130123135#sthash.YDH6WY43.dpuf