பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து  72 பேரும் பலி?

brazil11

பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணியை ஏற்றிச்சென்ற விமானமொன்று கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள் உட்பட 72 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு குறித்த வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
brazil1