இளவரசர் ஹரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞன்

கிரெனடா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி தனது வரைபடத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரபலமாகியுள்ளது.

சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஹரி, தலைநகர் செயின்ட் ஜார்ஜில் உள்ள Anse கடற்கரையில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்கள் கண்காட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கண்காட்சியில் தனது வரைபடம் இருந்ததை கவனித்த ஹரி அதை கண்ட அதிர்ச்சியில் வியந்துள்ளார். குறித்த வரைபடத்தை 18 வயது குறைபாடுடைய இளைஞரான Richie Modeste என்பவர் வரைந்துள்ளார்.

Richie Modeste, குறைபாடுடைய இளைஞர்களுக்கென கிரெனடாவின் புதிய வாழ்க்கை அமைப்பு வழங்கும் தொழில் மற்றும் வாழ்க்கை திறன்கள் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரைபடத்தை பார்த்து வியந்த இளவரசர், நீங்கள் எவ்வளவு காலமாக வரைகிறீகள் என கேட்க்க, 6 வருடங்களாக வரைகிறேன் என Richie Modeste பதிலளித்துள்ளார்.

பின்னர், Richie Modesteயின் கலைப்படைப்பை பாராட்டிய ஹரி, நீங்கள் ஒரு பயங்கர திறமைசாலி என குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் Richie Modeste தனது படைப்பை இளவரசருக்கு பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

625-0-560-320-500-400-194-800-668-160-90-1 625-0-560-320-500-400-194-800-668-160-90