டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டின் நாயகன் இவரா?

625-500-560-350-160-300-053-800-748-160-70

அமெரிக்க பத்திரிக்கையான ‘டைம்ஸ்’ நடத்தும் ‘இந்த ஆண்டின் நாயகன்’( Person of the Year) என்ற பட்டத்திற்கான இணையதள வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பை விட முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்க பத்திரிக்கையான ‘டைம்ஸ்’ 1927-ம் ஆண்டு முதல் ஆண்டின் நாயகன் என்ற பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பாக பேசப் பட்ட ஒருவருக்கு அளித்து வருகிறது.

இதற்காக இணையதளத்தில் வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். அவ்வாறு இந்த ஆண்டும் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி புதின், அமெரிக்க உளவுத்துறையான FBI யின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் காமே, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கூக், பிரித்தானிய பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன.

‘இந்த ஆண்டின் நாயகன்’ பட்டத்தை தெரிவு செய்வதில் வாசகர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானது. இதுவரை நடந்துள்ள வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21% வாக்குகளும், விக்கிலீக்ஸ் வலைதளத்தின் நிறுவனர் ஜுலியன் Assange 10% வாக்குகளும், ஒபாமா 7% வாக்குகளும், ரஷ்ய ஜனாதிபதி புதின் 6% வக்குகளும், டொனால்ட் ட்ரம்ப் 6% வாக்குகளும் பெற்றுள்ளனர் என்று டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இதில் 21% வாக்குகள் பெற்று அனைவரை விடவும் முன்னிலையில் உள்ளார் மோடி. மேலும் வரும் டிசம்பர் 4-ம் திகதி வரை வாக்கெடுப்பு நடக்கும் என்றும், அதற்குள் இந்நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இப்பட்டத்திற்கான போட்டிக்கு மோடி 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.