ஜேர்மன் சான்சலரிடம் கண் கலங்கி நின்ற அகுதி சிறுவன்! மனதை உருக்கும் வீடியோ

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

முதல் முறையாக ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கலை நேரில் கண்ட ஆப்கான் அகுதி சிறுவன் அவரிடம் கண் கலங்கி நன்றி தெரிவித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அனைவரது மனைதையும் உருக வைத்துள்ளது.

Heidelberg நடந்த கூட்டத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த கூட்டத்தில் Edris என்ற ஆப்கான் சிறுவன் அவரது தந்தையுடன் கலந்துக்கொண்டார்.

இதன்போது மைக்கில் பேசிய Edris கூறியதாவது, ஏஞ்சலா மேர்க்கல் உங்களுக்கு மிகுந்த நன்றி என கூறி திகைத்தார். பின்னர், நான் ஒரு முறை உங்களின் கையை தொட வேண்டும் என கோரினார்.

உடனே ஏஞ்சலா மேர்க்கல் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து Edrisக்கு கை கொடுத்தார். முதல் முறையாக ஏஞ்சலா மெர்க்கலை நேரில் கண்ட சிறுவன் அவரிடம் கண்கலங்கி நன்றி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி அனைவரது மனைதையும் உருக வைத்துள்ளது. மேலும், கூட்டத்தில் அதிருப்தி கட்சி உறுப்பினர்கள் மேர்க்கலை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டு ஜேர்மனி ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஏற்றுக்கொண்டது. இதற்காக ஏஞ்சலா மேர்க்கல் பல பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சந்தித்தார் என்பது நினைவுக் கூரதக்கது.