3000 அடி தொலைவில் இருந்து குறி பார்த்து சுட்டுத்தள்ளும் ஐ.எஸ் பயங்கரவாதிகள். அச்சுறுத்தும் வீடியோ

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

ஐ.எஸ் பயங்கரவாதிகள் 3000 அடி தொலைவில் இருந்துகொண்டு இலக்குகளை குறி பார்த்து சுட்டுத்தள்ளும் பயங்கர வீடியோ காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீடியோவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் எந்த தொலைவில் இருந்தும் தங்களது இலக்குகளை வேட்டையாட முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் ராணுவத்தினர் பயன்படுத்தும் வகை பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி குறித்த தாக்குதல்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில் வெகு தொலைவில் இருக்கும் ஒரு ஈராக் ராணுவ வீரன் பொத்தென திடீரென்று சுருண்டு விழுகிறார். அந்த ராணுவ வீரனை சுட்டுத்தள்ளியது ஐ.எஸ் பயங்கரவாதிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற Snipers வகை போராளிகள் என கூறப்படுகிறது.

ஐ.எஸ் வெளியிட்டுள்ள குறித்த வீடியோ மொசூல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொசூல் நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கும் பொருட்டு அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த நகரம் தங்கள் வசமிருந்து கைவிட்டு போகாமலிருக்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் மொசூல் நகரின் பல பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும், அங்கிருந்த பெரும்பாலான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.