அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்கலங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

அணுக் கழிவுகளில் இருந்து மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலங்களை உருவாக்கும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அணுக் கழிவுகளில் இருந்த வெளியாகும் கதிர்ப்பினைப் பயன்படுத்தி விரைவில் மின்கலங்களை தயாரிக்கவுள்ளனர்.

இம் முயற்சியில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இவ் வகை மின்கலங்கள் எந்தவிதமான மாசுக்களையும் சூழலுக்கு வெளிவிடாது எனவும், பராமரிப்பு அவசியம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நேரடியாகவே மின்சக்திய பிறப்பிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம் மின்கலங்கள் மிகவும் வினைத்திறனாக இருப்பதுடன், வைர வடிவிலும் இருக்கும்.

அதாவது கார்பன் 14 புறதிருப்பத்தில் வடிவமைக்கப்படவுள்ளது.

மேலும் இவற்றின் அரை ஆயுட்காலமானது 5,730 வருடங்கள் வரை இருக்கும் எனவும் கணிப்பிட்டுள்ளனர்.