செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வீரர்களின் கண்கள் பறிபோகும் ஆபத்து! ஏன் தெரியுமா?

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விண்வெளியில் பயணமாகும் வீரர்களின் கண்கள் எதனால் பாதிக்கப்டும் என்ற கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

பல்வேறு சவால்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த விண்வெளி ஆராய்ச்சியின் முடிவில் இதுவரை பல மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளன.

ஆனால், விண்வெளி பயணம் மேற்கொண்ட பிறகு பூமிக்கு திரும்பும் மூன்றில் இரண்டு வீரர்களுக்கு பார்வை குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பல ஆண்டுகளாக பதில் கிடைக்கவில்லை.

விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து விட்டு பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரரான ஸ்கொட் கெல்லியும் இதே பிரச்சனையை எதிர்க்கொண்டார்.

எனினும், இந்த மர்மத்திற்கு என்ன காரணம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இது விண்வெளி பயணம் தொடர்பான முயற்சிகளுக்கு பெரிதும் உதவும் எனவும் கூறியுள்ளனர்.

அதாவது, விண்வெளி பயணம் மேற்கொண்ட பிறகு ஒருவர் பூமிக்கு திரும்பும்போது அவரது மூளையை சுற்றியுள்ள ஒருவகை திரவத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

இந்த மாற்றமானது அவரது முதுகு தண்டுவடத்திலும் நிகழ்வதால் அவரது பார்வை திறன் குறைந்து விடுவது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த பார்வை திறன் குறைப்பாட்டை தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பயணமாக உள்ள அனைத்து விண்வெளி வீரர்களும் பார்வை இழக்கும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

625-0-560-320-500-400-194-800-668-160-90-2 625-0-560-320-500-400-194-800-668-160-90-3