மனிதர்களுக்கு சவால் விடும் வேற்றுகிரவாசிகள்

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

விண்வெளி விஞ்ஞானத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தற்போதைய வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லும் இலத்திரனியல் விண்வெளி ஓடம் ஒன்றை உருவாக்கும் பணிகளை நாஸா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில், தற்போது எரிபொருள் உதவியுடன் விண்ணுக்கு செல்லும் ரொக்கட்டுகளை விட விரைவான வேகத்தில் இந்த ஓடம் விண்வெளிக்கு செல்லும் என நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதன் தற்போது விண்வெளிக்கும் பயணம் செய்யும் வேகத்தை விட 10 மடங்கு விரைவான வேகத்தில் இந்த விண்வெளி ஓடம் செல்லும் என கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகம் போன்ற இடங்களுக்கு செல்லும் நீண்ட தூர விண்வெளி பயணங்களில் குறித்த இடத்தை சென்றடைய இரண்டு ஆண்டுகள் ஆகும்.

புதிய விண்வெளி ஓடத்தின் மூலம் 70 நாட்களில் குறிப்பிட்ட இடத்தை சென்றடைய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த விண்வெளி ஓடம் சூரிய சக்தி மூலம் இயங்கும் என்பதால், எரிபொருள் தேவைப்படாது. நாஸாவின் இந்த புதிய தொழில்நுட்பம் வேற்று கிரகவாசிகளிடம் இருக்கும் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.

வேற்று கிரகவாசிகளின் விண்வெளி ஓடகங்கள் செல்லும் அதிவேக தொழில்நுட்பம் தற்போது மனிதனுக்கும் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.