ரணிலுடன் பேச்சுவார்த்தை…! பெல்ஜிய இளவரசர் மீது குற்றச்சாட்டு

ranilw-e1432288993805

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உரிய நடைமுறையின்றி உத்தியோகபூர்வபேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் பெல்ஜியத்தின் இளவரசர் லோரன்ட் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் வெளியுறவுக்கொள்கைகளுக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பில் பெல்ஜியத்தின் இளவரசர், பெல்ஜியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை.

சந்திப்பு முடிந்த பின்னரே அறிவிக்கப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சந்திப்பு கடந்த மாதம் ரணில் விக்கிரமசிங்க, பெல்ஜியத்துக்கு சென்றிருந்த வேளையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.