அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் குறித்து ஜனாதிபதி கட்டுப்பாடு

maith1-jpg2_-jpg4_

அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அமைச்சர்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது பாதுகாப்பிற்காக அதிக பட்சமாக இரண்டு பாதுகாப்பு வாகனங்களையே பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்படி, இரண்டுக்கு மேல் பாதுகாப்பு வாகனங்களுடன் தொடரணியாக அமைச்சர் ஒருவர் பயணித்தால் இரண்டுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வாகனங்களை சோதனையிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தமக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுப்பதாக நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறி ஐந்து ஆறு பாதுகாப்பு வாகனங்களுடன் வாகனத் தொடரணியாக வீதியில் பயணிப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி தேசிய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் பயணங்களின் போது அதிக பட்சமாக இரண்டு பாதுகாப்பு வாகனங்களையே எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.