நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு

bandulla_guna-e1356200632969-720x480

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் உயர்த்தப்படுவதனை எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொரளை ஸ்ரீ வஜிராராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கூட்டு எதிர்க்கட்சி எதிர்க்கின்றது.

அமைச்சரவை அமைச்சர்களின் செலவுகளை வரையறுத்தல் என்ற அரசாங்கத்தின் தேர்தல் கால வாக்குறுதி வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு எடுத்த தீர்மானத்தின் ஊடாக இது நன்றாக புலப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளும் தற்போது அதன் செயற்பாடுகளும் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

அமைச்சரவையை குறைத்து செலவுகளை குறைப்பதாகக் கூறி மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக அன்று தற்போதைய ஆட்சியாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மஹிந்த தரப்பு அதிக வாகனங்களை பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

தற்போது இந்த அரசாங்கமும் அவ்வாறான வழியையே பின்பற்றுகின்றது என பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.