இலங்கையின் கூட்டு தளபதியை சந்தித்தார் இந்திய கடற்படை தளபதி

625-117-560-350-160-300-053-800-210-160-90

இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதி எயார் சீப் மார்சல் கோலித குணதிலக்கவுக்கும் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

காலி கலந்துரையாடலுக்காக இந்திய தளபதி வந்திருந்த நிலையிலேயே நேற்று கொழும்பில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளினதும் படைவரலாறுகள் மற்றும் பரஸ்பர உறவுகள் குறித்து பேசப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இரண்டு நாடுகள் மத்தியிலும் ஒத்துழைப்பை நீடிப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.