வவுனியாவில் ஒமேகாவின் குடும்ப தினம்

625-117-560-350-160-300-053-800-210-160-90-1

ஒமேகா ஆடைத்தொழிற்சாலையின் குடும்ப தினம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

8.30 மணியில் இருந்து 1.30 மணிவரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலவச வெளிநோயார் பிரிவு, மூக்கு கண்ணாடி வழங்கல், ஆரோக்கிய வாழ்வுக்கான ஆலோசனைகள், இலவச பற்சிகிச்சை முகாம் உட்பட மருத்துவ முகாமும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பிறப்பு மற்றும் இறப்பு பதிவு தொடர்பான நடமாடும் சேவையும் விவசாய பொருள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளதுடன் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.