அதிகளவு கோழி இறைச்சி சாப்பிடுபவரா நீங்கள்? உங்கள் கவனத்திற்கு

 broiler-chicken

அதிகளவில் ப்ரோய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதனால் பாரியளவில் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ப்ரோய்லர் கோழி இறைச்சி அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதனால் பக்டீரியா தொடர்பான நோய்களினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுகின்றது என நுண்ணுயிரி தொடர்பான விசேட நிபுணத்துவ வைத்தியர் குஷ்லானி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சுகாதார கல்விப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தியர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ரோய்லர் கோழிகள் மற்றும் பன்றிகளின் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள நுண்ணுயிர்ப்பகை மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறான இறைச்சி வகைகளை அதிகளவில் உணவாக உட்கொள்வதனால் பக்ரீயா நோய்களினால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நுண்ணுயிர்ப் பகை மருந்துகள் வழங்கினாலும் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதனால் பக்ரீயா தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

இலங்கையில் இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெரிதும் உயர்வடைந்துள்ளது.

எனவே இவ்வாறான வகை உணவுப் பொருட்கள் பயன்பாட்டை வரையறுப்பதற்கும், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, பன்றி போன்றவற்றுக்கு நுண்ணுயிர் பகை மருந்து வழங்குவதனை தடுக்கவும் இலங்கை மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் குஷ்லானி ஜயதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.