அலரி மாளிகையில் நடந்த இரகசிய பேச்சுவார்த்தை! ஆடம்பர ஹோட்டலில் ஷிரந்தி ராஜபக்ஷ

625-256-560-350-160-300-053-800-461-160-90

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் சுற்றுலாவுக்காக, நாளொன்றுக்கு 45 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அப்போதைய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அலரி மாளிகைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இரகசியமாக கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன அதிகாரிகள் என்ற ரீதியில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அவ்வாறு செயற்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அந்த அதிகாரிகள் யார் என்பதனை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நாள் அன்று இரவு சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் பலர் இதில் தொடர்புப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஹோட்டல் கட்டணமாக நாள் ஒன்றுக்க 45 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

அந்த கட்டணங்கள் வெளிவிவகார அமைச்சினால் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.