யாழில் சிறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

யாழ்.மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும், பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று(30) யாழ். தெலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிறந்த சேவைகளை செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காகவே இந்த நிகழ்வு என பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படவிருந்தது. ஆனாலும் யாழ் நகரில் கடந்த காலமாக இருந்த அசாதாரண சூழல் காரணமாக குறித்த திகதியில் இந்நிகழ்வு நடாத்த முடியாது போனது.

ஆனாலும் இன்று இந்நிகழ்வினை நடத்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பொலிஸ்மா அதிபரின் சுற்றுநிரூபத்தில் கூறியவாறு மூன்று மாதங்களுக்கொருமுறை உங்களுடைய சேவையின் அடிப்படையில் பரிசில்களை வழங்குமாறு கூறியிருந்தார்.

விசேட பரிசில்கள் பெறுவோரை, பொலிஸ்மா அதிபர் நேரடியாக கலந்து கொண்டு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அனைவரையும் வரவழைத்து உங்களுக்கு அவரின் கையால் பரிசில்கள் வழங்குவதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுள்ளார்.

இந்த பரிசளிப்பு நிகழ்வு ஏன் நாடத்தப்படுகின்றது என்றால், பொலிஸார் ஆகிய உங்களுடைய சிறந்த சேவையின் அடிப்படையில் தான், இவ்வாறு நிகழ்வில் மட்டுமல்லாது அவரவர் சிறந்த சேவையினை பாராட்டும் வகையில் அவ்வப்போது பரிசில்கள் வழங்கப்படும்.

உயர் பதவியில் இருக்கலாம், கான்ஸ்டபலாக இருக்கலாம், உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியராக இருக்கலாம். உங்களுக்கு தெரியும் யார் வேலை செய்கிறார்கள் யார் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் என்று, அதேபோல் யார் பரிசு பெறுகிறார்கள், யார் பரிசு பெறவில்லையென்றும் தெரியும் என சுட்டிக்காட்டினார்.

மேலும், நீங்கள் செய்யும் அதியுயர் சேவையின் நிமித்தம் பணப்பரிசில் மட்டுமல்லாது விஷேட பரிசில்களும் வழங்கப்படும் என்று இதன்போது சஞ்சீவ தர்மரட்ண கூறியமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12

இந்த நிகழ்வில், யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.