மட்டக்களப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல வர்த்தகர் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று(30) இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த 30 வயதான கணிபா மபாஸ் என வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிப்பர் ரக வாகனத்தில் வேனொன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை வேனில் பயணம் செய்தவர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றது.

மேலும், வான் மற்றும் ரிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் ஏற்றி துக்கம் அனுஷ்டிப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-13 625-0-560-320-160-600-053-800-668-160-90-14 625-0-560-320-160-600-053-800-668-160-90-15 625-0-560-320-160-600-053-800-668-160-90-16 625-0-560-320-160-600-053-800-668-160-90-17 625-0-560-320-160-600-053-800-668-160-90-18 625-0-560-320-160-600-053-800-668-160-90-19 625-0-560-320-160-600-053-800-668-160-90-20