எதிரணி துடுப்பாட்ட வீரர்களை கலங்க வைத்த இலங்கை வீரர்கள்!

625-500-560-350-160-300-053-800-748-160-70

இலங்கை அணி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியது.

அதில், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செயல்படுத்தினர்.

இந்நிலையில் இலங்கை அணியில் ஒரு நாள் போட்டிகளில் இந்த வருடம் சிறப்பாக பந்து வீசிய வீரர்களின் அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் முதல் இடங்களில் உள்ள வீரர்களின் பெயர்களும் அவர்கள் எடுத்த விக்கெட்டுகளும் இடம் பெற்றுள்ளது.

அதன் படி முதல் இடத்தில் வேகப்பந்து வீச்சாளரான லக்மல் 12 போட்டிகள் விளையாடி 88.2 ஓவர்கள் வீசி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 38 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக வேகப்பந்து வீச்சாளர்களான நோவன் குலசேகரா, நுவன் பிரதீப், மேத்யூஸ், பெரெரா என முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் பட்டியில் வெளியாகியுள்ளது.