இலங்கை அணிக்கு பயிற்சி அளிக்க பிரபல பாகிஸ்தான் வீரர்! வெளியான காரணம்!

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

இலங்கை அணிக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கொழுப்புக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி பிரபல பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் இலங்கை அணி வீரர்களுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்கவுள்ளார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ள பயிற்சிபட்டறையில் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறியதாவது,

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்காக இலங்கை அணியை தயார்படுத்தும் நோக்கிலேயே திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அதன் அடிப்படையிலேயே நாம் வசீம் அக்ரமின் பந்துவீச்சு பயிற்சியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பயிற்சிபட்டறையை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

625-0-560-320-500-400-194-800-668-160-90