சில்லறை இல்லாமல் தவிக்கிறோம்! சேவாக் போட்ட கலகல டுவிட்

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை இல்லாமல் அல்லாடுவதால் உங்கள் பேடிஎம் பணத்தை என் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யுங்கள் என ரவீந்திர ஜடேஜாவுக்கு, வீரேந்திர ஷேவாக் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டகாரர் வீரேந்திர ஷேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் ஏதாவது ஒரு விடயத்தை பற்றி பரபரப்பாக டுவிட் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அவர் கிண்டல் டுவிட்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு நேற்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஸ்பான்சராக இருக்கும் பேடிஎம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜடேஜாவுக்கு ஒரு லட்சம் அளித்துள்ளது.

இதை குறிக்கும் வகையில் வீரேந்திர ஷேவாக் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், வா ஜட்டு பாய்! பல பேர் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை இல்லாமல் அல்லாடுகிறோம்.

உங்களுக்கு பேடிஎம் ஒரு லட்சம் அளித்துள்ளது. அதில் கொஞ்சத்தை என் பேடிஎம் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யுங்கள் என கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

View image on Twitter