இன்று யுவராஜ் சிங் திருமணம். குவிந்த நட்சத்திரங்கள்.. பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங், பாலிவுட் நடிகையான ஹசல் கீச்சை திருமணம் செய்ய உள்ளார்.

இவர்களின் திருமண வைபவம் சண்டிகரிலுள்ள பிரபல ஹொட்டலில் இன்று நடைபெற உள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று இரவே சென்று விட்டனர், அவர்களுக்கு கோக்டைல் பார்ட்டி வைக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியை வென்ற கையுடன் இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு சென்றதால் திருமண வீடே களைகட்டியுள்ளது.

விராட் கோஹ்லி மட்டும் வழக்கம் போல தன்னுடைய பாணியில் யுவராஜ் சிங் மற்றும் மணமகள் ஹசால் கீச்சை வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க கூறியிருப்பார் போல் தெரிகிறது.

அதில் யுவராஜ்சிங், மணமகள் ஹசல் கீச் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் கையை உயர்த்திக் கொண்டு போஸ் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் முரளி விஜய், பார்த்திவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைப், கபில்தேவ் போன்ற பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் யுவராஜ்சிங் சற்று தாடியுடன் காட்சியளித்தார். அவர், கறுப்பு வண்ண பண்டகாலா வகை ஜாக்கெட் அணிந்திருந்தார்.

ஹசல் கீச், ஸ்லீவ்லெஸ் பிளைன் பனாரஸ் பார்டர் போட்ட, வெள்ளை நிற லெகன்கா அணிந்திருந்தார். அவரது ஆடைகளில் கோடா வேலைப்பாடு அதிகம் செய்யப்பட்டிருந்தது.

இதில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி பைஜாமா போன்ற உடை அணிந்து வந்திருந்தார்.

மேலும் யுவராஜ் சிங் சச்சினுக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் இன்று சச்சின், கங்குலி, சேவாக் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பலரும் இதில் கலந்து கொளவார்கள் என்பதால் திருமண வைபோகத்தில் ஒரு நடசத்திர பட்டாளத்தையே பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.