கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் பலி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை செய்த அறுவரில் நால்வர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் குழு சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபாலவின் மேற்பார்வையின் கீழ் வைத்தியர் லக்ஸ்மி சோமதுங்க,ஜே.எச்.எம்.கே.கே.பீ.கமல் ஜயசிங்க,ரோஹன த சில்வா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

எனவே இந்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.