பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்

 

 

தொகுப்பு

a_004 download

TOPSHOT - Indian police arrest activists from the Social Unity Centre of India (SUCI) organisation as they block a road during a protest against a gang rape in Kolkata on May 31, 2016. A woman was kidnapped and gang-raped by at least four men on May 29 in the Salt Lake area of the city and is currently being treated in hopsital, local media reported. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

01. அறிமுகம்

02. பெண்ணின் பெருமை

2.1  பெண்ணுரிமை

03. வன்முறைகள்

3.1 பெண்களுக்கெதிரன வன்முறைகள்

3.2 பெண்களுக்கெதிரான வன்முறையின் வடிவங்கள்

3.3 பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படும் முறைகள்

3.3.1 உடல் ரீதியான துஷ்பிரயோகம்

3.3.2 பாலியல் துஷ்பிரயோகம்

3.3.3 மன எழுச்சி ரீதியான துஷ்பிரயோகம்

3.3.4 பொருளாதார துஷ்பிரயோகம்

3.3.5 உள ரிதியிலான துஷ்பிரயோகம்

3.4 வீட்டு வன்முறை என்றால் என்ன?

3.4.1 பெண்களுக் கெதிரான வன்முறை சார்ந்த தகவல்களும்      விளக்கங்களும்

3.4.2 வன்முறையை சந்திக்கும் சிறு பிள்ளைகள்

3.4.3 வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வன்முறை அதிகரிப்பு

04. பெண்ணுரிமைகள்

4.1 சர்வதேச தராதரம்

4.2 பெண்களுக்கு எதிரன எல்லா வகையான பாராபட்சம் காட்டுதலகளை இல்லாது    ஒழிப்பது பற்றி ஐ.நா சமவாயம்

4.3 இலங்கையும் பெண்கள் உரிமைகளும்

4.4 இலங்கை பெண்கள் சமவாயம்

4.5 பெண்கள் சமவாயம் என்றால் என்ன?

05. பெண்ணுரிமைக்கான உறுப்புரைகள்

5.1 சீடோ சமவாயம்

5.1.1 பெண்களுக்கு இழைக்கப்படும் பராபட்சங்கள்

5.1.2 அரசாங்கத்தின் பொறுப்பு

5.1.3 அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கும் சம உரிமை

5.1.4 அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம உரிமை

5.1.5 இனத்துவத்திற்கான சம உரிமை

5.1.6 கல்வியைப் பெறுவதற்கான சம உரிமை

5.1.7 தொழில் செய்வதற்கான சம உரிமை

5.1.8 சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை

5.1.9 பொருளாதார மற்றும் சமூக உரிமை

5.1.10 கிராமியப் பெண்களின் உரிமை

5.1.11 சட்டத் துறை சார்ந்த சமத்துவம்

5.1.12 திருமணத்திலும் குடும்பத்துள்ளும் சமத்துவம்

5.2 பெண்ணுரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் செய்யப்பட்டுள்ள பிற     ஏற்பாடுகள்

5.2.1 பாலியல் வல்லுறவு

5.2.2 இல்லத்து வன்முறை

5.2.3 இயற்கைக்கு மாறான உடலுறவு

5.2.4 விபச்சாரம், பெண் வியாபாரம்

06. பெண்களுக்கு எதிரன வன்முறைகளைத் தவிர்ப்பதற்றகான வழிமுறைகள்

6.1 வீட்டு வன்முறையை தீர்ப்பதற்கான வழிகள்

07. முடிவுரை

Line

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (3)

Line

01. அறிமுகம்:

பெண்களுக்கென தனித்துவமான உரிமைகள் பல உள்ள போதும், இன்று உலகளாவிய ரீதியில் பெண்களுக் கெதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (5)

Line

02. பெண்ணின் பெருமை:

பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும், நாடும் இயங்க முடியாதிருக்கும். அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலும் சங்க காலங்களிலும் அவளின் அறிவாற்றல், சிறப்புக்கள், பெருமைகள் என்பனவற்றைப் பல்வேறு நூல்கள் வாயிலாக அறிகின்றோம். பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின் வளர்ச்சிக் காலத்தில் பெண்ணின் சமூக அந்தஸ்தையும், அவளிற்கு மறைமுகமாக அழுத்தங்களையும் ஏற்படுத்திய தன்மைகளையும் பலர் ஆய்வு செய்துள்ளனர். பொதுவாக பல்வேறு அழுத்தங்கள், வௌ;வேறு வழிகளில் அவளிற்கும் கொடுக்கப்பட்டலும், அவள் தனது திறமைமையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி சமூகத்தில் சிறந்த நிலைக்கு வந்துள்ளாள் என்பது வெளிப்படையுண்மை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (6)

Line

2.1  பெண்ணுரிமை:

“பெண்ணடிமைத் தீரும் மட்டும் பேசுந்திரு நாட்டில் மண்ணடிமைத் தீருவது முயற்கொம்பே”
என்றான் பாரதிதாசன்.

பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும் நாடும் இயங்க முடியாது இருந்திருக்கும். அவள் இயங்கும் சக்தியாகவும் இயக்கும் சக்தியாகவும் காணப்படுகின்றாள். மகாத்மா காந்தியடிகள் பெண்னைப் பற்றிக் குறிப்பிடும் போது “ஆணும் பெண்ணும் சமூதாயத்தில் ஒன்றையொன்று மிகை நிரப்பும் அங்கிகளாகின்றனர்”  ஒருவனுக்கு ஒருவர் ஆதாரமாக இருப்பதல், ஒருவரின்றி மற்றவர் வாழ்வதென்பது இல்லை என்ற நிலமையை உருவாக்கிக் காட்டினார்கள். எனவே இவர்களுள் ஒருவரின் அந்தஸ்தைப் பாதிக்கும் எந்தவொன்றும் இரண்டு வர்த்தக திரையும் முற்றாக அழித்து விடும் என்பதை நாம் உணர்த்துவது அவசியமாகும் என்றும் தெளிவுபடுத்தியவர் காந்தி அடிகள்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (7)

Line

எமது சமூகத்தில் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் கருவில் தொடங்கி கல்லறை வரை தொடர்ந்து கொண்டே வருகின்றது. பெண்களுடைய உரிமைகள் பால்நிலைச் சமத்துவம் இன்மையால் சமூக பொருளாதார கலாசார அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுகின்றது. “பெண்கள் உரிமைகளும் மனித உரிமைகளே” என்பதோடு ஆண்களும் பெண்களும் பராபட்சம் இன்றி சரிநிகர் சமத்துவம் உடையவர்களாக வாழ வேண்டும். எது எப்படி இருப்பினும் இன்று மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பது கண்கூடு.

Line

03. வன்முறைகள்:

குறிப்பாக இன்றைய காலப்பகுதியில் உலகில் பல்வேறு வன்முறைகள் காணப்படுகின்றது. அந்த வகையில் நாம் யுத்தங்கள,; வன்முறைகள,; ஆர்ப்பாட்டங்கள் என்பன அவற்றில் சில. ஆனாலும் கூட இவற்றினை எல்லாம் விட குடும்பங்களுக்கும் இடையிலும் அதன் உறுப்பினர்கள் மத்தியிலும்,  பெண்களுக்கு இடையிலும் பல பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றது. அந்த வகையில் தான் அதனை நாம் பெண்களுக்கு எதிரான வன்;முறை என்று பொதுப்பெயர் கொண்டு அழைக்கின்றோம். அந்த வகையில் தான் இன்றை காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்;முறைகள் குடும்பத்துக்கு குடும்பம் அதிகரித்த வண்ணமே உள்ளதுடன் அதன் விளைவுகளும் அதிகமாகவே காணப்படுகின்றது.

கணவன் மனைவி மத்தியிலும் அதன் குடும்ப அங்கத்தவர்கள் மத்தியிலும் அதிகமான வன்முறைகள் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை மட்டுமன்றி உலகிலும் பல வகையான வன்முறைகள் காணப்படுகின்றது குறிப்பாக அவற்றில் ஒன்றாகவே பெண்களுக்கு எதிரான வன்;முறையினைக் கருத முடியும். குறிப்பாக வன்முறைகள் என்பது மனிதனானவன் தனது அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி தன்னைச் சார்ந்த மக்களையும் தன்னைச் சாராத மக்களையும் தனது ஆளுமைக்குள் உட்படுகின்ற போது அதனையே நாம் வன்முறைகள் என்று குறிப்பிடுகின்றோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (8)

குறிப்பாக வன்முறை ஒன்று ஏற்படுமிடத்து அதனால் பாரிய விளைவுகளையும் தாக்கங்களையும் நாம் எதிர் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படுகின்ற போது தான் குடும்பத்துக்குள்ளும் அதன் வெளியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக இந்த வன்முறையைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். குறிப்பாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான தகராறுகள் மற்றும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தகராறுகள் மற்றும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தகராறுகள் பாரிய வன்முறைகளுக்கும் கொலைச்சம்பவங்களுக்கும் வாக்கு வாதங்களுக்கும் வித்திட்டது என்றே கூறலாம் குறிப்பாக நாம் வன்முறைகளை பல்வேறு வகையாக வகைப்படுத்த முடியும் அவையாவன,

 வீட்டு வன்முறை
 பெண்கள் வன்முறை
 சிறுவர் வன்முறை 
 இனத்துவ வன்முறை

போன்றனவற்றை நாம் சில உதாரணமாகக் கொள்ளலாம.; குறிப்பாக வன்முறைகள் என்பது மனிதனானவன் தன்னுடைய ஆளுமையைப் பிரயோகித்து தனது குறிக்கோளையோ அல்லது தனது வைரக்கியத்தை நிலை நிறுத்த முற்படுகின்ற போது தோற்றம் பெறுபவை ஆகும். அந்த வகையில் வன்முறைகள் பல்வேறு காரணங்கள் காரணமாகவும் பல்வேறு நோக்கங்கள் அடிப்படையிலும் தோற்றம் பெற வாய்ப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும.; குறிப்பாக வன்முறை பொதுவாக தோற்றம் பெறுவது வீடுகளில் ஆகும். அதாவது வீட்டு அங்கத்தவர்கள் தங்களுக்கு உடல் மற்றும் உள மற்றும் மன ரீதியாக தாக்கம் ஏற்படுகின்ற போது குறித்த நபர்கள் அதனை வன்முறைகளாகவும் தகாத செயல்கள் மூலமாகவும் தமது குடும்ப அங்கத்தவர்களிடம் பிரியோகிக்கின்ற போது அதனை நாம் வீட்டு வன்முறை என்ற விடயத்துக்குள் வரையறை செய்யலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (9)

Line

மேலும் குறிப்பாக குடும்ப செயற்பாடுகளில் மிகவும் அத்தியாவசியமான சில விடயங்கள் காணப்படுபடுகின்றன. அவை இங்கு கிடைக்காத பட்சத்தில் குறிப்பாக பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன கிடைக்காத சந்தர்ப்பங்களில் அங்கு குறித்த நபர்களுக்கடையில் அதிருப்தி நிலை ஏற்பட்டு அது பாரிய சிக்கலைக் கொடுக்கின்ற போது அதனை வன்முறையாகக் கொள்ளலாம்.

அதாவது வறுமை மற்றும் அழுத்தம் மற்றும் சமூக பண்பாட்டுக் காரணிகளின் காரணமாகவும் இலங்கை மட்டுமன்றி உலகிலும் பெண்களுக்கு எதிரான வன்;முறைகள் ஏற்பட காரணமாகின்றன இலங்கையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்;ட துறைகளிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்களும் வீட்டு வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறுகின்றது. ஆகவே தான் இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்;முறையை ஒழிப்பதன் மூலமும் ஏனைய வன்முறைகளை ஒழிப்பதன் மூலமும் நாம் அமைதியான வாழ்க்ககையை வாழ முடியும் என்பது உண்மையாகும்.

அதே போன்று பெண்களுக்கு எதிரான வன்முறை அல்லது துஷ்பிரயோகம் என்னும் போது பெண்கள் சமூகத்தில் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொள்ளுகினறனர். எவ்வௌ; வழிகளில் பாதிப்புக்களை எதிர்நோக்கி அதன் காரணமாக பெண்கள் எந்தந்த அடிப்படையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதனைக் குறித்து நிற்கின்றது. குறிப்பாக உலகில் காணப்படுகின்ற வன்முறைகளின் காரணமாக பாதிக்கப்பகின்றவர்களாக பெண்களாகவே காணப்படுகின்றனர் என்று பெண்கள் தொடர்பான ஆய்வுகள் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Line

3.1 பெண்களுக்கெதிரன வன்முறைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும். இதனை விளங்கிக் கொள்ளுமுன் வன்முறை என்பதன் முழு அர்த்த்ததை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அகராதிகளின் படி பாதிக்கப்படக் கூடிய மோசமான தாக்கம், காயம், உணர்வுகளின் பாதிப்பு, இப்படிப் பல விடயங்கள் தரப்பட்டுள்ளன. எனவே வன்முறை என்றவுடன் வெறும் உடல் தொடர்பான புறத்தாக்கம் என்று மட்டும் நினைக்காமல் அகத்தைப் பாதிக்கக் கூடிய நீண்ட கால் நிரந்திர மனக் காயங்களைத் தரக் கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களையும் மனதில் கொள்ள வேண்டும். வன்முறைகள் உடலியல் ரீதியானவை, உளவியல் ரீதியானவை என்று வகைப்படுத்தப்படும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (10)

உடல் தாக்கங்கள், அடிதடி, மனைவை அடிப்பது, மாமியார் கொடுமை, பாலாத்காரம் என்ற கட்டாய உடலுறவுக்கு வற்புறுத்தல், பாலியல் துன்புறுத்தலாகிய பல பிரச்சினைகள், கற்பழிப்புப் போன்றவை அடிப்படையான வன்முறைகளாகக் காணப்படுகின்றன. அத்தகைய பாதிப்புக்களின் சுவடுகள் உடலில் வடுக்களையும், மாறுதல்களையும் உருவாக்கக் கூடியன. அத்தோடு நில்லாமல் அவை மனதில் துயரத்தையும் உருவாக்கக் கூடியன.

உளவியல் தாக்கங்கள் பெண்களை அவமரியாதை செய்து அவர்களைப் பற்றி அவதூறு பேசி அவர்களின் உணர்வுகளைப் பாதித்து மனதைப் பாதிக்கின்ற செயல்களாகும். அத்தகைய பாதிப்புக்கள் பிறகு உடலை வருத்தும் நோயாகவும் மாறி விடுகின்றன. குறிப்பாக உடலில் அல்லது உளவியல் எந்த ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்பட்டாலும் பெண்ணின் உடலும் மனமும் பாதிப்படைகின்றன.

ஆதிக்க உணர்வுகளின் மிகையான செல்வாக்கினால் இன்றைய உலகில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய வன்முறைகளை பெண்கள் மீது கட்டவிழ்;த்து விடுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான். குறிப்பாக உளவியல் ரீதியான வன்முறைகள் பெண்கள் மீது பெண்களே அதிகமாகப் பிரயோகம் செய்கிறரர்கள் என்று சொல்லாம்.

அடையப்பட வேண்டிய இலக்குகள் தெளிவாக இருந்தும் கூட பெண்கள் மேம்பாடு எங்கோ தடைப்பட்டுக் கொண்டு இருப்பது தெளிவாக இருக்கின்றது. வழிகள் பல இருந்தும் கூட வாய்ப்புக்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் கண்கூடு. இந்தத் தடைக்குக் காரணம் என்ன என்பதும் கேள்வியாகும். ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் சமூதாயத்தில் பெண்ணிய மேம்பாட்டிற்கென தனியான கவனம் செலுத்துவது என்பது சிக்கலானதே. ஆனால் எந்தவொரு விடயத்திலும் அது பெண்களால் முடியாது என்ற முடிவுக்கு வருவதை தவிர்க்கலாம் இல்லையா? அந்த அடிப்படையில் பெண்களின் வேலைவாய்பபுக்கள் இரண்டாம் இடத்திற்கே நிர்ணயப்படுத்தப்டுகினறன. கல்வி, திறமை, அனுபவம் அனைத்துமே பால் அடிப்படையில் பதவிகள் தீர்மானிக்கபடுகின்ற காரணத்தினால் பெண்களுக்கு சிறந்த நிலைகளை எட்டுவதற்குப் பயன்படாமல் போகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முன்னுக்கு வரக் கூடிய பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாகும். பணிப்பாகுபாடு காட்டி பெண்களை அச்சுறுத்தி உடல் ரீதயின தாக்கங்களை உண்டுபண்ணக் கூடிய ஆபத்துக்களை பெண்களின் மீது திணிக்கிறார்கள். பணியில் ஆணும் பெண்ணும் சரியாக சமமாக நடாத்தப்படாமை பெண்கள் செய்யும் பணிகளில் குற்றங்கண்டு பிடித்தல், பெண்களின் நடத்தையைத் தூற்றுதல், ஊதியத்தில் சமமினமை பொன்ற பல தீமைகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே பெண்களை மனவியல் ரீதியாகப் பாதிக்கின்றன. குறிப்பாகப் பெண்களை தரக்குறைவாகப் பேசும் கொடுமை பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களை மட்டுமன்றி முழுக் குடும்பத்தையுமே பாதித்து விடக் கூடியன. குடும்பத்தகறாறுகள் அதனால் ஏற்படும் வன்முறைகள் போன்றவை முழுக் குடும்பத்தையுமே குறிப்பாக குழந்தைகளை மிகவும் பாதித்து விடக் கூடியன. எனவே குடும்ப முன்னேற்றமே தடைப்படும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்பதைப்பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (11)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பார்க்க முன்பாக இந்தப் பிரச்சினை உலகில் எப்படி அவதாரம் எடுத்துள்ளது என்பதைப் பார்ப்போம். 1992 இல் யூகோஸ்லாவியாவில் 12000 பேர் வன்முறைக்கு உட்பட்டு இருக்கிறார்கள். 6 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகின்றாள். இதில் 5 சதவீதமானோரே பொலீசில் முறையிடுகின்றனர். பப்புவாநீயுக்கினியில் 67.7 வீதமான கிராமப்புறப் பெண்ணகள் வன்முறைக்கு உள்ளாகின்றார்கள். கனடாவின் 4 பேருக்கு ஒரு பெண் வன்முறையை அனுபவிக்கிறாள். தாய்லாந்தில் இருந்து சுமார் 8 – 10 000 பேர் விபச்சாரத்திற்காகக் கடத்தப்படுகின்றனர். ஆபிரிக்கால் பல மில்லியன் பெண்கள் பிறப்புறுப்பு சிதைக்கும் சடங்குகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் வரதச்சனை கொடுமை காரணமாக மரணங்களும் பெண்கள் சிசுக் கொலையும் அதிகமாக காணப்படுகின்றன. கென்னியாவில் 42 சதவீதமான பெண்கள் கணவனின் அடி உதைகளை வாங்க நேரிடுகின்றது. இலங்கையிலும் இதே நிலைதான்.

ஆக முழு உலகமுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஏதோ ஒரு ரூபத்தில் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கெல்லாம் மூலகாரணம் பற்றி ஆராய்ந்தால் அது அடிப்படையிலேயே பெண்களுக்குச் சமஉரிமை தரப்படாமல் சமூதாய வரலாறு என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இன்று பல நடைமுறைச் சட்டங்கள் பெண்கள் பாதுகாப்புக்கென இவற்றை மீறி பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பலாத்காரம் போன்றவற்றிற்கு கடுமையான தண்டனை முறைகளைப் பின்பற்ற வேண்டும். தண்டனை முறைகளை அமுல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அகற்றப்பட வேண்டும். இவை சரியாக இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் தொடர்பான முறையீடுகள் பொலீசுக்கு அறிவிக்கபடாமலே மறைக்கப்படுகின்றன.

Line

3.2 பெண்களுக்கெதிரான வன்முறையின் வடிவங்கள்:
 பாலியல் வன்முறை
 விபச்சாரம்
 மானபங்கம் செய்தல்
 தாக்குதல்கள்
 மனைவியைத் துஷ்பிரயோகம் செய்தல்

இவற்றின் வளைவாக பெண்கள் சொந்தத் தைரியத்தையும், துணிவையும் பாதிக்கின்றது. வன்முறையின் விளைவாக அவர்கள் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (12)

Line

3.3 பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படும் முறைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (13)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (14)

Line

3.3.1 உடல் ரீதியான துஷ்பிரயோகம்:

தூக்குதல், அடித்தல,; தள்ளுதல், கிள்ளுதல், இழுத்தல், கடித்தல், முடியை இழுத்தல் என்பனவற்றை நாம் உடல் ரீதியான வன்முறையாகவே காணப்படுகின்றது. மற்றும் மது அருந்த வைத்தல் போதைப்பொருள் பாவிக்கத் தூண்டுதல் போன்றவற்றையும் நாம் அவ்வாறான உடல் சார்ந்த ஒரு பெண்களுக்கு எதிரான வன்;முறையாகவே கருதலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (15)

Line

3.3.2 பாலியல் துஷ்பிரயோகம்:

ஆபத்து ஏற்படும் வகையில் பால் ரீதியான உறவுச் செயற்பாட்டுக்கு முயற்சித்தல் அல்லது சம்மதமின்றி அவ்வாறான செயற்பாட்டிற்கு முயற்சித்தல் பாலியல் துஷ்பிரபோகத்திற்கு மட்டுமன்றி உடல் ரீதியாக ஏற்படுத்தப்படும் தாக்குதல்கள் உடல் ரீதியாக தாக்கம் ஏற்படுத்திய பின் தவறான பாலியல் உறவுக்கு முயற்சித்தல் மரியாதைக்குறைவாக ஒரு பாலியல் ரீதியான பயமுறுத்தல் என்பனவற்றை நாம் பாலியல் சார்ந்த துஷ்பிரயோகமாக கொள்ளலாம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (16)

Line

3.3.3 மன எழுச்சி ரீதியான துஷ்பிரயோகம்:

ஓருவரின் சுய கௌரவத்தையும் உணர்வுகளையும் பாதிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தல் இது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக ஒருவரின் திறமைகளை குறைத்தல் பெயரை இழுக்கப்படுதல் அல்லது அவனது அவளது பிள்ளைகளை தொடர்புபடுத்தி ஒருவரது பெயரை அவமதித்தல் என்பனவற்றை நாம் இங்கு மன எழுச்சி சார்ந்த துஷ்பிரயோகமாகவே நாம் கொள்ளலாம்.

Line

3.3.4 பொருளாதார துஷ்பிரயோகம்:

ஒருவரது நிதி வளங்களைக கட்டுப்படுத்தி நிதிக்காக தனிநபரில் தங்கியிருக்கும் நிலை ஏற்படுத்தல் பணம் கிடைக்கும் வழிவகைகளை ஏற்படுத்தாமல் முடக்குதல் மற்றும் வேலைக்குச் செல்லுதல் பாடசாலை செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப் படுத்தல் போன்ற செயற்பாடுகளை நாம் இங்கு உள்ளடக்க முடியும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (17)

Line

3.3.5 உள ரீதியிலான துஷ்பிரயோகம்:

பயமுறுத்தல் மூலம் பயன் ஏற்படுத்தல் உடல் ரீதியாக குறித்த நபருக்கும் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் துணைவரின் குடும்பத்தவற்கு அல்லது நண்பர்களுக்கு தீங்கு விளைவித்தல் செல்லப்பிராணிகளின் உடமைகளை அழித்தல் குடும்பத்தவர் நண்பர் அல்லது பாடசாலை மற்றும் தொழில் புரியும் இடத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தல் ஆகியன அடங்கும்.

பெண்களுக்கு எதிரான வன்;முறை இனம் வயது பாலியல் நோக்கு மதம் அல்லது பால் ரீதியிலான வேறுபாடின்றி யாருக்கும் ஏற்படலாம.; பெண்களுக்கு எதிரான வன்;முறையானது சமூக பொருளாதார பின்னணியுடன் கல்வியறிவு மட்;டம் கூடியது வீட்டு வன்முறையானது எதிர்ப்பவர் இருவருக்கும் அல்லது அதே பாலினம் கொண்டவர்களுக்கிடையில் மற்றும் மிக நெருங்கிய திருமணமான நண்பர்கள் ஒன்றாக தங்கியிருப்பவர்கள் மத்தியில் இடம் பெறலாம். வீட்டு வன்முறையானது பாதிக்கப்பட்டவரை மட்டுமன்றி முறையே குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள் சக தொழிலாளர்கள் வேறு நேரில் பார்த்தவர்கள் இவர்களுடன் பெருமளவில் சமுதாயத்தையும் பாதிக்கக் கூடியது. வீட்டு வன்முறையை நேரில் சந்தித்து அத்தடன் வளரும் பிள்ளைகள் இக்குற்றத்தினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் வீட்டில் அடிக்கடி இவ்வாறான வன்முறைகளை சந்திக்கும் பிள்ளைகள் சமூக உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுப்பதோடு வன்முறை சாதாரண சாதாரண வாழ்க்கை முறை என்ற தோற்றப்பாட்டை வளர்த்து எதிர்காலத்தில் சமூகத்தில் அடுத்த சந்ததியினர் குற்றவாளிகளாகவும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவராகவும் தம்மை அவ்வாறான சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (18)

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்;முறைகள் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள் அதிகளவில் பெண்களுக்கு எதிரான வன்;முறைக்கு உள்ளாகி வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்;முறைகளால் பெண்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பெண்களுக்கு எதிரான வன்;முறையில் அதிகளவில் இடம்பெறும் வன்முறையாக குடும்பத்தலைவரகள் மது போதையில் தமது மனைவியரை அடித்து துன்புறுத்துவது குறிப்பிடத்தக்கதாகும். 2005ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க சட்ட திட்டங்களின் படி வீட்டு வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திக் கீழ் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது குறிப்பாக “காந்தா பீட்ட” என்ற அமைப்பு பெண்கள் தொடர்பாக வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தமக்கு நிவாரணம் தேட முற்பட முயற்சிக்கும் சற்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்காக இலங்கையில் காரியாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆந்த வகையில் இதற்கான காரியாலயமாக இலங்கையின் பொரளையில் உள்ள காரியாலயத்தில் வீட்டு வன்முறையின் காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் தமக்கான நீதிக்கான பரிந்துரையை மேற்கொள்ள முடியும். அல்லது காரயாலய தொலைபேசி இலக்கமான 0114718585 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

வீட்டு வன்முறையை சந்திக்கின்றவர்களாக அதிகமானோர்வீட்;டு பிள்ளைகளாகவே காணப்படுகின்றனர்.  அந்த வகையில் பிள்ளைகளை அடித்தல் துன்புறுத்தல் அவர்களின் சுதந்திரத்தை பறித்’தல் போன்றன இவ் வீட்டு வன்முறையின் தாக்கத்தினால் ஏற்படுகின்றன குறிப்பாக வீட்டு வன்முறையின் போது குறித்த நபர்களின் சண்டை மற்றும் சச்சரவுகள் காரணமாக குடும்ப அற்கத்தலர்களால் தாக்கப்படுதல் மற்றும் உடல் உள ரீதியாக துன்புறுத்தல் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக சிறு பிள்ளைகள் தமது ஆளுமையை இழப்பதுடன் மிகவும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

Line

3.4 வீட்டு வன்முறை என்றால் என்ன?

வீட்டு வன்முறை என்பது இன்றைய காலப்பகுதியில் மிகவும் அதிகமாக இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வாகவே காணப்படுகின்றது. அந்த வகையிலே தான் வீட்டு வன்முறை பற்றிய சிந்தனைகளும் அது பற்றிய விளக்கங்களும் இன்று பிரசித்தி வாய்ந்தவையாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆந்த வகையில் தான் நாம் வீட்டு வன்முறை என்றால் என்ன என்று நோக்குகின்ற போது அது பற்றிய தெளிவான விளக்கத்தினை பெற முடியும்.

அந்த வகையில் வீட்டு வன்முறை என்பது குறிப்பாக கணவன் மனைவிக்கிடையில் பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பில் முறண்பாடு தொடர்பான தன்மை வீட்டு வன்முறைக்கு வெளிப்படையாக அமைகின்றது. குறிப்பாக ஒரு குடும்பத்துக்குள் ஏற்படுகின்ற உள்ளக மற்றும் வெளியக ரீதியிலான அனைத்து ரீதியிலுமான இம்சைகளைக் குறித்து நிற்கும். குறிப்பாக இதன் காரணமாக குடும்ப அங்கத்தவர்கள் மத்தியிலும் குடும்பத்திற்கு உள்ளேயும் அதிகளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக உடலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கும் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளாவின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கணவன் மனைவிக்கிடையில் முறண்பாடு தோன்றுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை மற்றும் அழுத்தம் பாலியல் ரீதியிலான திருப்தியின்;மை திருமணத்தின் பின்னரான பாலியல் பலாத்காரம் வறுமை மற்றும் சமூக பண்பாட்டுக்காரணிகள் போன்றன இதற்கு காரணமாகின்றன. அந்த வகையில் தான் வீட்டு வன்முறைக்கான அத்திவாரமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டு வன்முறையின் போது கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் மற்றும் நம்மைச் சூழவுள்ள உறவினர்களும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (19)

குறிப்பாக சமூக பண்பாட்டு ரீதியிலாக கட்டியெழுப்பட்ட விழுமியங்கள் வன்முறைக்கு இட்டுச் செல்வதுடன் விழுமியங்களும் பாரம்பரிய சிந்தனைகளும் அதற்கு முட்டுக்கட்டையாகவும் அல்லது தடையாகவும் காணப்படுகின்றது குறிப்பாக சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதார ரீதியிலாக பெண்கள் ஆண்களில் தங்கி வாழும் நிலைமை அவர்களை வன்முறையினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்ற சந்தர்பத்தினை உருவாக்கிக் கொடுக்கின்றது. வகையில் பெண்களின் பொருளாதார ரீதியில் தங்கி வாழ்தல் நிலைமையானது அவளை ஒரு வலு வழுவற்றவளாக காணப்படுவது வீட்டு வன்முயையின் அதீத தன்மையையே காட்டி நிற்கின்றது.

குறிப்பாக வீட்டு வன்முறை என்றால் என்ன என்று நேரடியாக பொருள் கொள்கின்ற போது கணவன் மற்றும் மனைவிகளுக்கிடையில் பல்வேறு சிக்கல்கள் தொடர்பாக இடம்பெறும் முரண்பாட்டுத் தன்மையே வீட்டு வன்முறை ஆகும். வீட்டு வன்முறையானது நட்பாகப் பழகும் ஒருவர் மீது மற்றவர தனது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் திணிப்பதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவின் துஷ்பிரயோகத்திற்கான நடத்தைக் கோலங்கள் என வரையறை செய்து கொள்ள முடியும். வீட்டு வன்முறையானது உடல் பால் மனக்கிளர்ச்சி பொருளாதார உடல் நல செயற்பாடுகள் அல்லது பயமுறுத்தும்; செயற்பாடுகள் மூலம் ஒருவர் மீது இன்னொருவர் காட்டும் செல்வாக்காகும் இச் செயற்பாடு அச்சறுத்தல் சூழ்ச்சி செய்தல் பங்கப்படுத்தல் ஆபத்தை ஏற்படுத்தல் ஊறு விளைவித்தல் தீங்கு விளைவித்தல் குற்றம் சுமத்துதல் மனம் நோக பேசுதல் பிறறை துன்பப்படுத்தல் போன்றவற்றை நாம் உள்ளடக்கலாம்.

Line

3.3.1 பெண்களுக் கெதிரான வன்முறை சார்ந்த தகவலும் விளக்கமும்:

குடும்பத்தில் ஏற்படுகின்ற வன்முறைகள் என்று நோக்குவோமாயின் முதலாவதாக நாம் மகள் மீது வல்லுறவு புரிதல் ஒரு குடும்ப வன்முறையாகவே காணப்படுகின்றது. குறிப்பாக சில வேளைகளில் கணவன் மனைவி இருவருள் மனைவி சில வேளைகளில் இறக்க நேரிட்டால் அவர்களுக்கிடையில் இருக்கும் குழந்தைக்கு தந்தையின் அதிக பாசம் ஏற்படுவதுடன் அதிலும் குறிப்பாக பிறப்பது பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் தந்தையின் அதிக பாசப்பிணைப்பு அதிகளவிலேயே அமைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த நிலையிலேயே வளர்ந்து வருகின்ற அப்பெண் குழந்தை மீது அதீத பாலியல் சார்ந்த உணர்வு ஏற்பட்டு அதுவே மிகப்பெரிய வல்லுறவுக்கு காரணமாகின்றது இது தொடர்பாக வீர கேசரி நாளிதலில் வெளியாகிய தகவல் ஒன்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

அந்த வகையில் அச் செய்தியாக மகள் மீது வல்லுறவு புரிந்த தந்தை கைது என்ற பிரசுரத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது அங்கும் தாயில்லாமல் வளர்ந்த ஒரு சிறுமியே குறிப்பாக 16 வயதுச் சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்பட்டவராவார். அதாவது வான்தேவி என்ற பின் தங்கிய கிராமப்பகுதியில் தாயில்லாமல் வளரந்த 16 வயது பெண்ணை அவளது தந்தையும் மாமனாரும் இணைந்து வல்லுறவுக்கு உட்படுத்தினர.; இதன் காரணமாக அப்பெண் மன ரீதியிலாகவும் உடல் உள ரீதியாகவும் பாதரிக்கப்பட்டு கர்ப்பமாக அப் பெண் காணப்படுவதாக அச் செய்தித்தாள் குறிப்பிடுகின்றது. அதன் பின்னர் அப் பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனை வைத்து நோக்குகின்றபோது இங்கு குடும்ப வன்முறை அங்கு தந்தையினதும் மாமனினதும் காரணமாக ஏற்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இங்கு குடும்பத்துக்குள்ளேயே பாலியல் சார்ந்த வன்முறை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வன்முறைகளில் பெரும்பாலானவை பாலியல் சார்ந்த இம்சையாகவே காணப்படுகின்றது. எனவே தான் பாலியல் சார்ந்த அனைத்து அம்சைகளையும் ஒழிப்பதன் மூலம் நாம் வன்முறையை ஒழிப்பதற்கான மிகக் குறைந்த முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (20)

Line

3.3.2 வன்முறையை சந்திக்கும் சிறு பிள்ளைகள்:

வன்முறையை சந்திக்கின்றவர்களாக அதிகமானோர் வீட்;டு பிள்ளைகளாகவே காணப்படுகின்றனர்.  அந்த வகையில் பிள்ளைகளை அடித்தல் துன்புறுத்தல் அவர்களின் சுதந்திரத்தை பறித்தல் போன்றன இவ் வன்முறையின் தாக்கத்தினால் ஏற்படுகின்றன குறிப்பாக வன்முறையின் போது குறித்த நபர்களின் சண்டை மற்றும் சச்சரவுகள் காரணமாக குடும்ப அற்கத்தலர்களால் தாக்கப்படுதல் மற்றும் உடல் உள ரீதியாக துன்புறுத்தல் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக சிறு பிள்ளைகள் தமது ஆளுமையை இழப்பதுடன் மிகவும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஆந்த வகையில் சில உதாரணம் மூலம் இவற்றை விளங்கிகச் கொள்ளலாம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (21)

டென்மார்க்கில் உள்ள அரச பாடசாலைகளில் 5-9 ம் வகுப்பிற்கு இடைப்பட்ட வகுப்புக்களில் படிக்கும் மாணவர்களில் நால்வருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வீட்டில் அடி வாங்கி வளர வேண்டிய அவலம் இருப்பதாக டென்மாரக்கின் தலைநகரில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கொப்பன்கேகனில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் நடாத்திய கருத்துக் கணிப்பில் மூன்று பிள்ளைகளுக்கு இரண்டு பிள்ளைகள் என்ற வீதத்தில் வீட்டில் அடித்து வளர்க்கப்படுவதாக தெரிய வந்துள்ளதாக பொலிற்றிக்கன் பத்திரிகை ஆச்சரியம் தெரிவுத்துள்ளது. ஆகவே நாடளாவிய ரீதியில் இது குறித்த ஆய்வை நடாத்த வேண்டுமென சமூக சேவைகள் அமைச்சு குறிப்பிட்டதன் பேரில் கருத்துக்கணிப்பின் படி வீட்டில் அடித்து வளர்க்கும் பிள்ளைகள் பாடசாலைகளில் வன்முறையாளர்களாக மாறுவதும் பின்னர் பிரச்சினைக்குரிய பிள்ளைகளாக மாறுவதும்  இந்த வீட்டு வன்முறையின் பொதுவான அம்சமாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில்தான் இந்த வீட்டு வன்முறையானது பெற்றோர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பாதிக்கப்படுவதற்கு நிலைக்களனாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Line

3.3.3 வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வன்முறை அதிகரிப்பு:

வேலைக்குச் செல்லும் மகளிர் அவர்களின் குடும்பத்தின் தேவையை ஓரளவுக்கு செய்யும் அதே வேளையில் அவர்களுக்கான வன்முறை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆந்த வகையில் நாம் பின்வரும் விடயத்தை உதாரணமாகக் கொள்ளலாம் அதாவது பெங்களுரைச் சேர்ந்த சுமார் 16 வயது முதல் 25 வயது வரையிலான திருமணமான பெண்கள் 750 பேரிடம் 2005 முதல் 2006 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட காலத்தில் நடாத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்களில் சுமார் 80 வீதத்தினர் கணவனால் துன்புறுத்தலுக்கு ஆனாக நேரிடுவதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு கணவனின் துன்புறுத்தல் அதிகமா காணப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது. வேலைக்குச் செல்லும் பெண்களின் கணவன் வேலையைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது ஒரு வேலையை தக்க வைத்துக் கொள்வதில் பிரச்சினை இருந்தாலோ சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வன்முறை இரட்டிப்பாவதாக தெரிய வருகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (22)

Line

04.  பெண்ணுரிமைகள்:

உரிமைகள் எனப்படுபவை இன்று அனைவராலும் உச்சரிக்கப்படுகின்ற விடயமாகி விட்டது. குறிப்பாக பெண்கள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்கள் அண்மைக்காலங்களில் சர்வதேச அளவில் மிகவும் கரிசரணைக்குரிய விடயங்களாகி இருக்கின்றன. இன்று சர்வதேச அளவில் காணப்படும் அரசுகளில் பெலும்பாலானவை 1950 களின் பின் தோற்றம் பெற்ற ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளாகும். இந் நாடுகளில் பெண்கள் உரிமைகள் தொடர்பான விடயங்கள் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றன. சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கருத்தேற்பிலே பால்நிலைச் சமத்துவம் இன்மை என்பது உள்ளுர் மட்டங்களிலும் சர்வதேச மட்டங்களிலும் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்தையும் பெண்களுக்கு எதிரான சகல பராபட்சங்களுக்கும் எதிரான பிரகடனத்தையும் பல நாடுகள் ஏற்று அங்கிகரித்துள்ள நிலையிலும் நடைமுறையில் அவை எந்தளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதையும்  தொடர்ந்தும்  சிக்கல் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது. ஏனெனில் பல்வேறு நாடுகளில் பெண்கள் மீதான பாராபட்சம் என்பது தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் இவை கலாசார சமூக அமைப்பு முறை குடும்பம் என்ற பல்வேறு காரணங்களைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன.

இலங்கையும் இத்தகையதோர் நிலைமையில் காணப்படுவதாகவே அடையாளம் காணப்பட்டு இருக்கின்றது. பெண்கள் உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்நாட்டுத் தராதரங்களுக்கு உள்ளீர்த்து நடைமுறைப் படுத்தப்படுவதன் மூலமே அதனைச் சிறந்த முறையில் அமுல்படுத்த கூடியதாகவே இருக்கும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (23)

Line

4.1 சர்வதேச தராதரம்:

பெண்கள் உரிமைகள் பற்றி பல்வேறு சமவாயங்களும் பட்டயங்களும் கையாளப்படுகின்றனவையாக உள்ளன. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் உறுப்புரை ஒன்றின் பிரகாரம் சகல மனித உரிமைகளும் சமனானவையாக கொள்ளப்பட வேண்டியதானது என்பது அறவே புறந்தள்ளப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. மேலும் இப்பிரகடனத்தின் வாயிலாக உயிர் வாழும் உரிமையும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட முடியாமைக்கான உரிமையும் காணப்படுகின்றது. அடுத்துப் பெண்கள் தொடர்பான மிக முக்கியமான சமவாயமாக “பெண்களுக்கு எதிரான சகல விதமான பாராபட்சங்களுக்கும் எதிரான பிரகடனம்” (CEDAW) விளங்குகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (24)

பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாராபட்சங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  இதன் உறுப்புரை 2 கூறுகின்றது. பெண்களது தனித்துவமான பண்புகளைப் பேணிப்பாதுகாக்கின்ற 1949 ஆம் ஆண்டின் ஜெனிவா சமவாயத்தில் போர்ச் செயற்பாடுகளில் பெண்களின் தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது பெண்கள் உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் மனித உரிமைகள் என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்ற போதே உருவாகி விட்டது என்றே கூறமுடியும். இதே வேளை ஐ.நா பொதுச் சேவை பிரகடனம் 1903 இன் பாயிரம், பெண்களுக்கு  எதிரான வன்முறைகள் என்பதை சமத்துவம் சமாதான அபிவிருத்தி என்பதற்கு தடைக்கற்களாகும் எனக் கூறியிருப்பதுடன் இதன் பின்னைய ஏற்பாடுகள் பாராபட்சம் என்ற ஏற்பாட்டுக்குள் குடும்ப வன்முறை எனும் விடயத்தை உள்வாங்கியுள்ளனர். இவற்றுக்கு எல்லாம் மேலாக பெண்களை ஒரு தனிப்பிரிவினராக ஏற்று அவர்களுக்குரிய உரிமைகளை மட்டுமே முற்றுமுழுதாகக் கையாளுகின்றதை பெண்கள் சமவாயம் விளங்;குகின்றது. எனவே இவ்வாறு பலதரப்பட்ட சமவாயங்களும் பிரகடனங்களும் சர்வதேச அளிவி;;ல் பெண்கள் உரிமைகள் தொடர்பில் காணப்படும் நிலையில் இலங்கை இவற்றுள் அநேகமானவற்றை ஏற்று அங்கீகரித்துள்ளதாகவே காணப்படுகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (25)

Line

4.2 பெண்களுக்கு எதிரன எல்லா வகையான பாராபட்சம் காட்டுதல்களை இல்லாது ஒழிப்பது பற்றி ஐ.நா சமவாயம்:

பெண்களுக் எதிராக உள்ள எல்லாவகையிலான பாராபட்சம் காட்டி இல்லாது ஒழிப்பது பற்றிய சமவாயம் ஐ.நா களின் பொதுமாநாட்டினால் 1979 இல் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. பெண்களது மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட சட்ட முறையாக வலுவில் உள்ள மிகவும் சுருக்கமன உடன்படிக்கை ஒன்றான இது 1981 செப்ரம்பர் மாதம் 3ம் திகதி அமுலுக்கு வந்தது. பெண்களுக்கான சர்வதேச உரித்துடமைச் சட்டம் ஒன்றாக அழைக்கப்படுகின்ற இச் சமவாயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள் மற்றும் தரக்கட்டளைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (26)

Line

4.3 இலங்கையும் பெண்கள் உரிமைகளும்:

இலங்கை பெண்கள் உரிமைகள் தொடர்பான பல சர்வதேச பிரகடணங்களை ஏற்றும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் இவ்வுரிமைகளை ஏற்று அங்கீகரித்துள்ள நிலையில் நடைமுறையில் இவற்றின் பிரயாகத்தைப் பார்ப்பது அவசியமாகின்றது. இலங்கை அரசியல் அமைப்பு உறுப்புரை 12 இன் கீழ் சமத்துவ உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பினும் அவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களுடன் முரண்படும் போது அச்சட்டங்களே மேலோங்கும் என்ற நிலை காணப்படுகின்றமை இதன் செயற்பாட்டுத் தன்மைக்கு குந்தகமான ஒரு நிலையையே தோற்றுவிப்பதாகின்றது. அது மட்டுமல்லாது இலங்கை ஒரு பன்மைத்துவக் கலாசாரபின்னணியையும்  பன்மைத்துவ சமூக அமைப்பபையும் கொண்ட நாடாகும். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் மீதான உரிமைகள் மீறல்கள் எந்த மட்டத்தில் அதிகம் இடம்  பெறுகின்றது என்பது இனங்காணப்பட வேண்டியதாகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (27)

Line

4.4 இலங்கை பெண்கள் சமவாயம்

1993 ஆம்  ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைப் பெண்கள் சமவாயம் அங்கீகரிக்ப்பட்டது. மகளிர் விவகார அமைச்சின் தேசிய மகளிர் குழுவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

Line

4.5 பெண்கள் சமவாயம் என்றால் என்ன?

பெண்கள் சமவாயம் என்பது பெண்களுக்கு எதிராக எல்லாவகையிலான வேறுபாடுகளை இல்லாதொழிக்கும் மற்றும் பெண்களுக்கான தீர்மானங்கள் எடுக்கும் துறைகளைப்பற்றி செயற்படுவதைப்பற்றி அரசாங்கத்தின் பொறுப்பை வெளிப்படுத்தும் பெண்கள் உரிமைகள் பற்றிய அரசாங்கக் கொள்கை சம்மந்தப்பட்ட வெளியீடாகும்.

Line

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (28)

Line

05.பெண்ணுரிமைக்கான உறுப்புரைகள்:
5.1 சீடோ சமவாயம்:

சீடோ சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கும் விடயங்கள் 30 உறுப்புரைகள் ஆகும்.

இதன் முதலாம் உறுப்புரையில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பராபட்சங்கள் எவை என்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகள் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கொண்டு இருக்கும் பொறுப்பு உறுப்புரை 2 இல் இருந்து 6 வரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்புரை 7-16 வரையில் பெண்களுக்கு உள்ள உரிமைகள் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. உறுப்புரை  17-26 வரையில் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பாகக் கண்டறியும் சீடோ சமவாயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (29)

Line

5.1.1 பெண்களுக்கு இழைக்கப்படும் பராபட்சங்கள்:

உறுப்புரை 1: பெண்களுக்கு இழைக்கப்படும் பராபட்சங்கள்

தமது குடும்பத்தின் உள்ளும் பாடசாலையிலும் பாதையிலும் என பல்வேறு இடங்களிலும் பெண்கள் பெருந்தொகையான துன்பதுயரங்களை அனுபவிக்க வேண்டியவர்களாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களால் சுதந்திரமான விதத்தில் தமது வாழ்க்கை நடாத்த முடியாது உள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அவர்களுடைய சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு நடவடிக்கை காரணமாகவும் பெண்களுக்க எதிரான பாராபட்சங்களைத் தடுக்கும் உரிமை.

5.1.2 அரசாங்கத்தின் பொறுப்பு:

உறுப்புரை 2 – 6: அரசாங்கத்தின் பொறுப்பு

பெண்களின் உரிமைகள் தொடர்பான சீடோ சமவாயத்தை அங்கரித்து, அதில் கைச்சாத்திட்ட நாடுகளில் எமது நாடும் ஒன்றாகும். அதன் காரணமாக சீடோசமவாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உரிமைகளை இலங்கை வாழ் பெண்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை அமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பெண்களுக்கு நியாயம் வழங்கும் விதத்தில் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது. பெண்களின் உரிமைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உரிமை பெண்களுக்குள்ளது.

5.1.3 அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கும் சம உரிமை:

உறுப்புரை 7: அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கும் சம உரிமை

அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு ஆண்களைப் போலவே பெண்களும் சமமான ஒரு உரிமை உள்ளது. ஆனால் பெரும்பாலான பெண்களின் அரசியல் உரிமை வாக்களிப்பதற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் உரிமையை பெண்கள் கொண்டிருந்த போதிலும் அத்தகைய பதவிகளை மிகக் குறைந்த எண்ணிககைணிலான பெண்களே வகித்து வருகின்றனர். நாட்டை நிர்வகிக்கும்  சட்டங்களை உருவாக்குவதிலும் அவற்றை அமுல்செய்வதிலும் பங்குபற்றும் உரிமையை பெண்கள் கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல அரசியல் அமைப்புக்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றில் இணைந்து செயற்படுவதற்கு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான உரிமை உள்ளது.

5.1.4 அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம உரிமை:

உறுப்புரை 8: அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம உரிமை

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுவரும் பல்வேறு விதமான கூட்டங்கள் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இத்தகைய கூட்டங்களில் உலகில் யாரோ ஒருவர் பங்கேற்கின்றார். இக் கூட்டங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண்களே எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். இது தொடர்பாகப் பெண்களுக்கும் ஒரு சமமான உரிமையைக் பெண்களுக்கும் உண்டு. பெண்கள்; நாட்டைப்  பிரதிநிதித்துவம் செய்வதற்கும் உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

5.1.5 இனத்துவத்திற்கான சம உரிமை:

உறுப்புரை 9: இனத்துவத்திற்கான சம உரிமை

உங்கள் தேசிய அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், மாற்றியமைத்துக் கொள்வதற்கும் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு அதனை வழங்குவதற்கும் நீங்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாத்துக் கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்.

5.1.6 கல்வியைப் பெறுவதற்கான சம உரிமை:

உறுப்புரை 10: கல்வியைப் பெறுவதற்கான சம உரிமை

கல்வியைப் பெற்று ஒரு நல்ல அந்நஸ்தைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை பெண்களுக்குண்டு.

5.1.7 தொழில் செய்வதற்கான சம உரிமை:

உறுப்புரை 11: தொழில் செய்வதற்கான சம உரிமை

ஒரு தொழிலைச் செய்வதற்கும் வருமானம் ஈட்டுவதற்கும் உங்களுக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தாழ்ந்த அந்தஸ்தை இல்லாதொழிக்கலாம்.

5.1.8 சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை:

உறுப்புரை 12: சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை

இலவச வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை பெண்களுக்குண்டு.

5.1.9 பொருளாதார மற்றும் சமூக உரிமை:

உறுப்புரை 13: பொருளாதார மற்றும் சமூக உரிமை

வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்பனவற்றை  பெற்று உங்கள் சமூக அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்வதற்கான உரிமைகள் பெண்களுக்குண்டு.

5.1.10 கிராமியப் பெண்களின் உரிமை:

உறுப்புரை 14: கிராமியப் பெண்களின் உரிமை

கிராமத்தில் வாழும்  பெண்கள் பின்வாங்கும் குணத்தில் இருந்து விடுபட்டு தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

5.1.11 சட்டத் துறை சார்ந்த சமத்துவம்:

உறுப்புரை 15: சட்டத் துறை சார்ந்த சமத்துவம்

சட்டத்தின் முன் நீங்கள் கொண்டிருக்கும் சமத்துவ நிலையினைப் பெறப் பெண்களுக்கு உரிமையுண்டு.

5.1.12 திருமணத்திலும் குடும்பத்துள்ளும் சமத்துவம்:

உறுப்புரை 16: திருமணத்திலும் குடும்பத்துள்ளும் சமத்துவம்

குடும்பத்துள் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய கண்ணியம் மற்றும் ஒத்துளைப்பு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உரிமைகள் உண்டு.

Line

5.2 பெண்ணுரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் செய்யப்பட்டுள்ள பிற ஏற்பாடுகள்:

இலங்கை அரசியல் அமைப்பின் 12(2) உறுப்புரையானது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை விளம்புகின்றது. பாலடிப்படையில் பாராபட்சம் எதுவும் செய்யக் கூடாது.

1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கப் பெண்கள், இளம் நபர்கள் மற்றும்  சிறுவர்கள் ஊழியச்சட்டத்தின் கீழ் பெண்களையும் 18 வயதிற்குக் குறைந்தோரையும் இரவில் வேலைக்கு அமர்த்தக் கூடாது.

Line

5.2.1 பாலியல் வல்லுறவு:

தண்டனைச்சட்டக் கொவையின் 364 ஆம் பிரிவு பாலியல் வல்லுறவுக்கான தண்டனையினை ஏற்பாடு செய்கின்றது.

5.2.2 இல்லத்து வன்முறை:

2005 வரை வீட்டு வன்முறைக்கு என்று சட்;டம் ஒன்றும் இல்லை. பெரியதோர் போராட்டத்தின் விளைவாக 2005 ஒக்டோபர் பாராளுமன்றத்தினால் வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டம் கொண்டுவாப்பட்டது. 2005 இன் 34 இலக்க வன்முறைத் தடுப்புச் சட்டம் என இது அறிமுகப்படுத்தப்பட்டது.

5.2.3 இயற்கைக்கு மாறான உடலுறவு:

தண்டனைச் சட்டக் கோவையின் 345ஆம் பிரிவு எவரேனும் ஒருவர் தாக்குதலின் மூலம் அல்லது குற்றமுறைப்பலாத்காரத்தின் மூலம் தொல்லைப்படுத்துவதற்கு உடைய சட்டம். இக்குற்றத்திற்கு இயற்கைக்கு மாறான உடலுறவு தொடர்பான தண்டனைச்சட்டத்தின் கோவை 365 ஆம் இலக்கச் சட்டம் கூறுகின்றது.

5.2.4 விபச்சாரம், பெண் வியாபாரம்:

விபச்சாரம் என்பது பாலியல் ரீதியாகச் சுரண்டும் இன்னுமொரு வடிவமாகும். விபச்சார விடுதியின் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவு இதனைக் கூறுகின்றது.

Line
06.பெண்களுக்கு எதிரன வன்முறைகளைத் தவிர்ப்பதற்றகான  வழிமுறைகள்:

அதைவிட முக்கியம் இந்தகைய வன்முறைகள் உலகுக்கு உணர்த்தப்பட வேண்டியதாகும். இது தொடர்பான சமூக விளிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். அதனால் சமூக அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும். பெண் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். திட்டமிட்ட குடும்பக் கட்:ப்பாட்டு முறைகள் பெண்களைப் பலப்படுத்தக் கூடிய அவர்களின் தொழில் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுப்பதாக மாற்றப்பட வேண்டும். பெண்களிடையே தன்னம்பிக்கையையும் சுயநிர்ணயத்தையும் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பெண்கள் தொடர்பான புதிய புரிந்துணர்வையும் புதிய நோக்குகளையும் பரவாக்க புயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் பற்றி பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள வழிகளைத் திறந்து விட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (30)

இந்த முயற்சிகளுக்கு பெருந்துணையாக இருக்கக் கூடியதை பெண்கள் மேம்பாட்டிற்று பாடுபடும் நிறுவனங்களும் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் ஆகும். பெண்கள் தொடர்பான இயக்கங்கள் பெண்களை நம்பிக்கையூட்டும் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய படிமுறைகளை அறிமுகப்படுத்தவும் பெண்கள் தொடர்பான புதிய அணுகுமுறைகள் சார்ந்த கருத்துப் பரப்பலுக்கு வழிசெய்யவும் வழிசெய்ய வேண்டும். அவர்களின் திட்டங்கள் செயற்பாடுகள் அறிவூட்டல் பணிகள் அனைத்துமே பெண்களைப் பற்றிய சரியான ஒரு புரிந்துணர்வை வெளிப்படுத்தக் கூடிய நோக்கத்தை மையமாகக் கொண்டே செயற்பட வேண்டும். இந்த முயற்சி முதலில் பெண்களிடையேயும் பின்னர் குடும்பங்கள் இடையேயும் அதன் பின் சமூகத்திலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

• உடல், உள ரீதியாக வன்முறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுதல்.
• விருப்பமில்லாத செயற்பாடுகளுக்கு வார்த்தைகளாலும் செயற்பாடுகளாலும் தூண்டுதல்
• கடத்துதல், மிரட்டுதல், தன்புறுத்தல், அடிமைப்படுத்துதல், கொலை செய்தல்
• ஆற்றல் திறன் பதவிநிலை வளர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் முடங்குதல்
• குடும்ப சமூக பொருளாதார கல்வி அரசியல் கலாசார நிலைகளில் இரண்டாந்தரப் பிரஜையாக நடத்துதல்
• சுதந்திரமற்ற குடும்பச்சுமைதாங்கியாக கலாசாரம் என்ற சமூகக் கொடுமைக்குள் உட்படுத்துதல்

இவ்வாறான உரிமை மீறப்படுவதால் ஒட்டுமொத்தமான குடும்ப சமூக பொருளாதார கல்வி கலாசார சகல அபிவிருத்தி நிலைகளில் தேசிய ரீதியாகவும்  சர்வதேச ரீதியாகவும் வளாச்சி குன்றுதல்.

Line

6.1 வீட்டு வன்முறையை தீர்ப்பதற்கான வழிகள்:

உலகில் ஏற்படுகின்ற பெருமளவிலான வீட்டு வன்முறைகளை இல்லாது ஒழிப்பதே அனைவரினதும் அபிப்பராயம் ஆகும் அந்த வகையில் வீட்டு வன்முறையை எவ்வாறு இல்லாது ஒழிக்கலாம் என்று நோக்குகின்ற போது:

வன்முறைக்கான சட்டங்கள் கொள்கைகள் கோட்பாடுகள் என்பனவற்றை அமுழ்ப்படுத்துவதன் மூலம் குடும்ப வன்முறையை நாம் ஒழிக்கலாம் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் தடுக்க முடியும். மேலும் பால்நிலை சமத்துவம் பற்றிய விளிப்புணர்வு நடவடிக்கைகளை விளங்க வைப்பதன் மூலமும், குடும்ப அங்கத்தவரகளுக்கு தெருக்கூத்துகள் வாய்லாகவும் மற்றும்’ நாடகங்கள் வாயிலாகவும் தெளிவாக புரிந்து கொள்ள வைக்க வேண்டும். மற்றும் தொடர்பு சாதனங்களின் மூலம் மக்களுக்கு குடும்ப வன்முறையின் வீரியம் பற்றி அறிவுறுத்தல்அல்லது விளக்கல் மற்றும் குடும்ப சம்பந்தமான செயற்றிட்டங்களை மாணவரகள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பரப்புதல் போன்றவாறான விளிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளின் மூலம் நாம் வீட்டு வன்முறையை ஓரளவு குறைக்க முடியும் என்பது அனைவரினதும் அபிப்பிராயமாகும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (31)

• பெண்கள் பிரச்சினை தொடர்பாக சமூக, வரலாற்று, இலக்கிய பொருளாதாரச் சட்ட நோக்கிலான தீர்வுகளைக் காணுதல்.

• வன்முறை தொடர்பான இலங்கைச் சட்டங்கள் உடனடியாகவே மறுசீரமைப்புப் பெற வேண்டும்.

• வெளிநாட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.அவர்களது வேலை நேரம், சம்பள விகிதம், தொழில் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கிய அடிப்படை உரிமைகள் கொண்ட சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும்.

• வீடு, வேலைத்தளம், போக்குவரத்து, வீதி என்பன பெண்களுக்கு பாலியல் தொல்லையில் இருந்தும் பல்வேறு வடிவங்களிலுமான இகழ்ச்சிகளிலிருந்தும் விடுபட்டுப் பாதுகாப்பானதாக அமைய வேண்டும். அத்துடன் அடியுதை பட்டு வரும் பெண்களுக்கு உடனடித் தேவையாகின்றது.

• பெண்களை இகழும் அல்லது அவர்களைப் பாலியல் பொருட்களாகக் கருதும் கட்டுரைகள் உள்ளிட்ட தொடர்பூடகங்களிலான பாலியல் திரிபுகள் கடும் எதிர்ப்புக்கு உள்ளாக்குதல் வேண்டும்.

Line
07. முடிவுரை:

“நீங்கள் எப்பொழுதும் பெண்களையே குறை கூறுகின்றீர்கள். ஆனால் அவர்களின் நன்மைக்காக ஏதாவது செய்கிறீர்களா? அவர்களுக்கு எதிராகச் சாத்திரங்கள் எழுதிக் கொண்டும், கடுமையான சட்டங்கள் எழுதிக் கொண்டும், கடுமையான சட்டங்களின் மூலம் அவர்களை அடக்கி வைத்துக் கொண்டும் அவர்களை வெறும் பழள்ளை பெறும் இயந்திரங்களாகவே ஆக்கி விட்டார்கள். அன்னை பராசக்தியின் தோற்றங்களான பெண்களை உயரச் செய்ய வில்லi என்றால் உங்களுக்கு உயர்வடைய எந்த வழியும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” (சுவாமி விவேகானந்தர் : இந்தியப் பெண்மணிகள் : ப-17) என்றார் விவேகானந்தர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (32)

பெண்களின் உயர்வுக்கு உறுதுணை புரிதல் ஆண்களின் தவிர்க்க இயலாத கடமை ஆகும். பெண்களுக்கு என்று தனியான  பல உரிமைகள் உள்ள போதும் தொடர்ச்சியாக பெண்கள் வன்முறைகளுக்கு உள்ளாவது வேதனைக்கு உரிய ஓர் விடயமாகும்.

இன்று இலங்கை பெண்கள் உரிமைகளை ஏற்று அங்கிகரித்துள்ள நாடாக விளங்குகின்ற போதும் அது அங்கீகரித்துள்ள சர்வதேச சமவாயங்களின் கட்டுப்பாடுகளை பூரணப்படுத்த இன்றும் முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளதாகவுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் பற்றிய அறிவை பரவலாக்குதல் மூலம் அவற்றை நடைமுறைப்படுத்துவதுடன் வாயிலாகவும் தேவையான புதிய சட்டங்களில் அறிமுகம் மூலமாகவுமே இவற்றை அடையலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்ணுரிமையும்,pothikai.wordpress.com-Rajani Thurai,Aruna Thurai,Trincomalee (33)

Line

உசாத்துணை நூல்கள்

Line

1. சுல்பிகா.ஆ., (2000), சமூகக் கோட்பாட்டுத் தளத்தில் பால்நிலை, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

2. சுவர்ணா.ஜ., (1985), “அபிவிருத்தித் திட்டமிடலில் பெண்களை ஒருங்கிணைத்தல்”, பெண்களுக்கான ஜக்கிய நாடுகள் தசாப்தம் இலங்கையில் உள்ள பெண்களின் முன்னேற்றமும் சாதனைகளும், பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம், கொழும்பு.

3. செல்வி.தி., (2000), சமூகக் கோட்பாடு பால்நிலை, பெண்கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

4. செல்வி.தி., (2007), பெண்ணடிமையின் பரிமாணங்களும் பெண்ணுரிமையின் விளக்கங்களும், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

5. செல்வி.தி., (1995;), நிவேதினி, மலர் -2, இதழ் – 1, பெண்கல்வி ஆய்வு நிறுவனம், தர்மராம வீதி, கொழும்பு

6. செல்வி.தி., (1999), நிவேதினி, மலர் – 6, இரட்டை இதழ் -1,2, பெண்கல்வி ஆய்வு நிறுவனம், தர்மராம வீதி, கொழும்பு

7. செல்வி.தி., (1995), நிவேதினி, மலர் – 2,  இதழ் – 2, பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளே பெண்கல்வி ஆய்வு நிறுவனம், தர்மராம வீதி, கொழும்பு

8. செல்வி ராமேஸ்வரன், (2009,) பெண்ணின் குரல், தொகுதி-8, இதழ்-1

9. பெண்ணடிமையின் பரிமானங்களும் பெண்ணுரிமையின் விளக்கங்களும், (1993), பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

10. கிஷாலி பின்ரோ ஜெயவர்த்தன மற்றும் சுவனி கொடிக்கார., (2003), இலங்கையில் பெண்களும் ஆட்சிமுறையும், இனத்துவத்துவத்துக்கான சர்வதேச நிலையம், கொழும்பு.

11. சந்திரிக்கா.சு., (1990), மக்கள் தொடர்புசாதனமும், மகளிரும்இ பெண்கல்வி வெளியீடு, கொழும்பு.

12. சரவணன்,என்., (2001), இலங்கை அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும், மூன்றாவது மனிதன் வெளியீடு, கொழும்பு.

13. செல்வி.தி., (1990), “பெண் விடுதலை வாதத்தின் பிரச்சினை மையம், அது ஒரு மேலைத்தேயக் கோட்பாடா? ” , பெண்கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

14. செல்வி.தி., (1995), இதழ்-2, மலர்-2, நிவேதினி, “பெண்களின் உரிமைகள் மனித உரிமைகள்” , பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

15. செல்வி.தி., (1996-1997), இதழ்-1,2, “பால்நிலைக் கற்கைநெறி சஞ்சிகை”, பெண் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

16. செல்வி.தி., இதழ்-9 மலர்-2, “பால்நிலைக் கற்கைநெறி”, பெண் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

17. செல்வி.தி., “வாழ்வியல் சமதர்ம கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்” , பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

18. செல்வி.தி., (2000), சமூகக் கோட்பாடு பால்நிலை, பெண்கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

19. செல்வி.தி., (2001), நிவேதினி, பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை, பெண் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

20. செல்வி.தி., (2007), பெண்ணடிமையின் பரிமாணங்களும் பெண்ணுரிமையின் விளக்கங்களும், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு

21. செல்வி.தி., பெண்களுக்கான சட்டவியல் விளக்கம் ஐஐஇ பெண்கல்வி ஆய்வு நிறுவனம், தர்மராம வீதி, கொழும்பு

22. செல்வி.தி., வாழ்வியல் சமதர்ம கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்க் கோலங்கள்: ஒரு பெண்நிலை விசாரணை, பெண்கல்வி ஆய்வு நிறுவனம், தர்மராம வீதி, கொழும்பு

23. வள்ளி நாயகி.இ., (2006), “யாழ்ப்பாணத்துச் சமுதாயத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு” .

24. விஜயலக்சுமி.சே., “பெண்”, சூரியா பெண்கள் நிலைத்தின் சஞ்சிகை, மட்டக்களப்பு.

25. நிவேதினி, 1994 பங்குனி, மலர் 1,இதழ் 1, பெண் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

26. நிவேதினி, 1995 மார்கழி, மலர் 2, இதழ் 2, பெண் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.

27. புள்ளிவிபரக் கையடக்க நூல் 2006, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், நிதித்திட்டமிடல் அமைச்சு, கொழும்பு.

28. பெண்களுக்கான ஜக்கிய நாடுகள் தசாப்தம் இலங்கையில் உள்ள பெண்களின் முன்னேற்றமும் சாதனைகளும், (1985),  பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம், கொழும்பு.

29. பெண்களும் தொடர்பு ஊடகங்களும் , (1991), தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கு, கொழும்பு.

30. பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை – 2005,2006, மகளிர் அரசியல் வட்டம், கொழும்பு.

31. பெண்ணின் குரல், (2009), தொகுதி–8, இதழ்-1, பெல்தோட்ட கார்டின்ஸ், கொழும்பு.

32. வர்த்தகம் அபிவிருத்தி வறுமைத்தணிப்பு என்பவற்றிற்கு இடையிலான தொடர்புகள், (2007), சட்டத்துக்கும் சமூகத்திற்குமான அறிமுகம், கின்ஸி டெரஸ், கொழும்பு.

33. பெண்ணடிமையின் பரிமானங்களும் பெண்ணுரிமையின் விளக்கமும், (1993), பெண்கல்வி ஆய்வு நிறுவனம், தர்மராம வீதி, கொழும்பு

34. சார் வொட் பஞ்ச், தமிழாக்கம் – சித்திரலேகா மௌனகுரு, (1995), பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல் மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வை, , சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு

35. பெண்களுக்கு எதிரான வனமுறைகள் அபிவிருத்திக்குத் தடை, வீட்டு வன்முறையை தடுப்பதற்கான சட்டம் தொடர்பாக நாம் கற்றுக் கொள்வோம், பெண்கள் உரிமைகள் பிரிவு, அக்ஷன்எயிட், இலங்கை, 2006. யூலை.

36. சீடோ சமவாயம் – பெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தலும் முன்னெடுத்துச் செல்லுதலும், பெண்கள் உரிமைகள் பிரிவு, அக்ஷன்எயிட், இலங்கை, 2006. யூலை.

 

அருணா துரை, திருகோணமலை  ,Arunoth