தேசியத்தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை தொகுத்து பாராளுமன்றத்தில் MP சிறிதரன் உரையாற்றியதில் தவறு என்ன?

 

தேசியத்தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை தொகுத்து பாராளுமன்றத்தில் MP சிறிதரன் உரையாற்றியதில் தவறு என்ன? உங்களால் முடியாது தானும் படுக்கான் தள்ளியும் கிடக்கான் என்பது போல் இவ்வளவு விடையங்களையும் தொகுத்து வேலை மினக்கிட்டு எழுதி அமைக்கு பாராட்டுக்கள் தமிழ் இனத்துக்குள் தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை வேண்டும் .

அதணை வளர்க்க ஒவ்வொறு ஊடகங்களும் செயற்ப்படவேண்டும் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் வடமாகாண சபையும் கூட்டமைப்பும் பிளவுகள் இன்றி ஒற்றுமையுடன் செயல்ப்பட வேண்டும் வடகிழக்கு இணைப்பு ஏற்படுத்த முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் இனப்படுகொலை ஆதாரங்களை திரட்டி ஜ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு இரகசியமாக தெரியப்படுத்தவேண்டம்.

. தேசியம் சுயநிர்னைய உரிமைக்காய் குரல்கொடுக்கவேண்டுட் சிங்கள பொதுபல சேனவுக்கும் புத்த துறவிகளுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சியாகிய நாம் போர்க்கொடி ஏந்தவேண்டும் இதைவிடுத்து இவ்வாறு அp க்களை ஊடகவாயிலாக தூக்கிவிடும் செயல் காரியங்களில் இறங்க்கூடாது என்பது எமது வேண்டுகோள் இருந்தும் mp யின் உரை ;;;;;;

செல்பிக்கு போஸ் கொடுத்த சராவும் பிரபாகரன் போஸ் கொடுத்த சிறியரும் – சிதைக்கப்படும் புனிதங்கள்

vakeesam-artical“தமிழர்நிலம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை தமிழர்தம் இதயக் கோவில்களில் தம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.”

இது இலங்கை பாராளுமன்றில் உறுப்பினர் சிறிதரன் கார்த்திகை மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரை.

கார்த்திகை 27 ஆம் திகதி நடைபெற்று முடிந்திருந்த மாவீரர்தின நிகழ்வுகளை வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து தங்கள் அரசியல் அசிங்கங்களை ஈடேற்றியுள்ளனர். மாவீரர் தினத்திற்கு முந்தயதினம் இலங்கை பாராளுமன்றில் நிகழ்த்தப்பட்ட உரை ஒன்றில் தொடங்கிய அரசியல் சித்துவிளையாட்டுக்கள் யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை செல்பி போஸ் கொடுத்தல் வரை வியாபித்திருந்தது.

இவை தொடர்பான ஆதாரங்கள் எமக்கு உடன் கிடைத்திருந்தாலும் மரணித்தவர்களை நினைவுகூரும் மகத்தான நாளில் வெளியிடக் கூடாது என வாகீசம் ஆசிரியர் குழு முடிவெடுத்திருந்ததன் அடிப்படையில் தற்போது அவற்றினை வெளியிடுகின்றோம்.

மே 18 நினைவுகளை நினைவுகூர ரணில்-மைத்திரி அரசாங்கம் அனுமதித்திருந்த நிலையில் மாவீரர் நாளினை நினைவுகூரல் எனும் விடையமும் மேலோங்கியிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் வரவுசெலவுத்திட்ட விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரசில் அங்கம் வகிக்கும் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உரைகளில் கார்த்திகை 27 நினைவுகூரலிற்கு சாதக சமிக்கைகள் வந்துகொண்டிருந்தன. இச் சந்தர்ப்பதத்தில்தான் கார்த்திகை இல் இளைஞர்கள் களத்தில் குதித்திருந்தார்கள். கிளிநொச்சியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணி அது.

இச் சிரமதானத்திற்குள் தம்மையும் மெதுவாக உட்புகுத்திக்கொண்டனர் தமிழ் அரசியல்வாதிகள். சமநேரத்தில் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசேட உரை ஒன்றினை ஆற்றிக்கொண்டிருந்தார். அவரது உரை உடனடியாகவே இணையங்களில் பரப்பப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரைக்கு தமிழர் தாயகத்திலிருந்தும் உலகெங்குமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்திருந்தன. அவரது உரையின் வரிகள் பிரபாகரனது உரைக்கு நிகராக இருந்தது. ஆனால் அது பிரபாகரன் ஒவ்வாரு மாவீரர் தினத்திலும் ஆற்றிய உரைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பிரதிகள் என்பது எவரிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நினைத்ததில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் தமிழர்கள் காலங்காலமாக இவ்வாறாக வரலாறுகளை மறந்து இவர்கள் போன்ற அரசியல் பிழைப்புவாதிகளின் பசப்பு வார்த்தைகளுக்குள் சிக்கி வாக்களித்து ஏமாந்து போய்விடுகிறார்கள் என்பது தானே உண்மை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு மாவிரர் தினத்திலும் ஆற்றிய உரைகளில் மிகச் சிறந்த வரிகளை களவாடி புலிகள் என்ற பதங்கள் இருந்த இடங்களில் தமிழர்கள் என மாற்றி அவற்றனை தொகுத்து ஐந்தரை நிமிட உரையாக பாராளுமன்றில் வாசித்திருக்கிறார் சிறிதரன் எம்.பி அவரது உரை கிளிநொச்சி கனபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் ஒலிக்கவிடப்பட்டிருக்கிறது.

மாவீரர் நாளில் கார்த்திகை 27 விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரைக்காக மக்கள் காத்திருப்பர். துயிலும் இல்லங்களில் ஒலிபெருக்கிகளில் அவரது உரை ஒலிபரப்பப்படும். அவரது உரை முடியும்போது சரியாக நேரம் 06.05 ஆக இருக்கும் அப்போது மணி ஒலிக்கவிடப்பட்டு மாவீரர் கல்லறைப் பாடலுடன் பொதுச்சுடர் ஏற்றப்படும்.
2007 ஆம் ஆண்டு மாவீரர் தினமும் கனகபுரத்தில் புலிகளின் அதே பாணியில் தான் நடந்திருக்கிறது. 06.05 இற்கு சுடர் ஏற்ற மக்கள் காத்திருக்கிறார்கள். அப்போது பிரபாகரன் பேசினால் எப்படிப் பேசுவோரோ அதே (குரல் அல்ல) கருத்தாளம் மிக்க வரிகளோடு உரை ஒன்று ஒலிக்கிறது ஒலிபெருக்கிகளில். அது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் ஆற்றிய உரை மீள் ஒலிபரப்புச் செய்யப்படுகின்றது. உரை முடிய பொதுச்சுடர் ஏற்றிய சிறிதரன் எம்.பி தனது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு பிரபகரன் பாணியில் கைகளைக் கட்டி அஞ்சலிக்கிறார். பின்னர் அவரது இறுகிய முகத்துடனான புகைப்படங்கள் உலாவவிடப்படுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிதரன் எம்.பி வடக்கில் அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றிற்குத் தெரிவாகியிருந்தார். அவரது அனேக தேர்தல் பிரச்சார உரைகள் விடுதலைப் புலிகள் பற்றியதாகவும் மாவீரர்கள் பற்றியதாகவுமே இருந்திருக்கிறது. யாரை உசுப்பேத்தல் செய்து அவர்கள் அளித்த வாக்குகளால் பாராளுமன்றம் சிம்மாசனம் ஏறினாரோ இன்று அதே மக்கள் முன் அவர்களை வைத்து புனிதங்களின் நெஞ்சின் மேல் ஏறி தலைமைச் சிம்மாசனத்திற்கு குறிவைக்கிறார்.

இவற்றுக்கு நடுவே மகள் ஆசைப்பட்டு கேட்டார் என்பதற்காய் ஜனாதிபதி மைத்திரியை வீட்டுக்கு அழைத்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய உதய நாயகன் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மனைவியுடன் சென்று இளைஞன் ஒருவர் எடுத்த செல்பிக்கு போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கின்றார். அவரது ஊடக வெளியீடுகளில் பிரபாபரன் படங்களும் மாவீரர் படங்களும் என பரபரப்பாய் விற்பனை நடந்துகொண்டிருக்க இவர் துயிலும் இல்லத்தில் அந்த புனிதங்களின் பதாதைக்கு முன் செல்பிக்கு போஸ் கொடுக்கும் படங்கள் வெளியாகியிருக்கிறது.

இந் நிலையே தொடருமாயின் எங்கள் தலைவர் சம்பந்தர் ஐயா சொன்னது போல நல்லாட்சி வெளிச்சம் தூரத் தெரிகிறது தீர்வு வெளிச்சம் 2017 தீபாவளிக்குள் தெரியுமோ என்னவோ 2017 கார்த்திகை மாவீரர் தினத்தில் இந்த அரசியல்வாதிகள் ஏற்றப்போகும் பொதுச் சுடர் வெளிச்சத்தில் இவர்கள் அருகில் இறுகிய முகத்தோடு விக்கிரம சிங்ககளோ இல்லாவிடில் சிறிசேனாக்களோ நின்று இணைச்சுடர் ஏற்றப்போவதை யாராலும் தடுத்திட முடியாது.

வாகீசத்திற்காக கலியுகன்

இச் செய்திக் கட்டுரை குறித்த விமர்சனங்கள் இருப்பின் vakeesamnews@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பிவைப்பின் பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரை ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சிறிதரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திலும் ஒலிபரப்புச் செய்திருந்தார். அவ் உரையானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 இலிருந்து 2007 இல் ஆற்றிய உரைகளில் இருந்து பிரதியெடுத்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் உரைகளும் சிறிதரன் செய்த மாற்றங்களும் (?) கீழே தரப்படுகிறது.

“எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம்
செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள்.”
( புலிகளின் தலைவர் 2002)

தமிழ் இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை,

தமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் தமிழர்கள்
நினைவு கூரும் நாள். (சிறியர் 2016)
“தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும்
மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை
ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும்
திருநாள்.” (புலிகளின் தலைவர் 2003)

“தமிழர்நிலம் சுதந்திர
தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர்
விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை தமிழர்தம் இதயக் கோவில்களில் தம் நெஞ்சுருகிப்
பூசிக்கும் திருநாள்.” (சிறியர் 2016)
“தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின்
விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட
எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.” (புலிகளின் தலைவர் 2004)

“தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின்

விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட
எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.” (சிறியர் 2016)
“தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள்.
எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த
எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.”
(புலிகளின் தலைவர் 2003)
“தமிழர் நிலம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர்
விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை தமிழர் தம் இதயக் கோவில்களில் தம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.”
(சிறியர் 2016)
“ஆயிரமாயிரம்
அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி,
அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.” (புலிகளின் தலைவர் 2012)

“ஆயிரமாயிரம்

அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி,
அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.” (சிறியர் 2016)
“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத்
துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக,
எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு
இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.” (புலிகளின்  தலைவர் 2006)
“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து,
சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து தமிழ்
மக்களுக்காகவும் அவர்களின் உயிர்வாழ்விற்காகவும் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த
உத்தமர்களுக்கு தமிழர்கள் சிரந்தாழ்த்தி வணக்கம்
செலுத்தும் நாள்.” ( சிறியர் 2016)
“சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப்
போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம்
நினைவு கூரும் புனித நாள்.” (புலிகளின் தலைவர் 2005)
“சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து,
அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை தமிழர்கள்
நினைவு கூரும் புனித நாள்.” (சிறியர் 2016)
“விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம்.
அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக
மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது
வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.” (புலிகளின் தலைவர் 2002)
“விடுதலை
என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக
வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது வீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர
விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.” (சிறியர் 2016)
“எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும்
அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி
நினைவுகூரும் இத் திருநாளில்” (புலிகளின் தலைவர் 2004)
“எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற
தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத்
திருநாள் தமிழர்களின் வரலாற்றில் புனித நாள்” (சிறியர் 2016)
“நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால்
சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழீழ தேசம்
பெருமை கொள்கிறது. மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக்
காண்கிறேன்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச்செல்லும்
ஒரு அதிசயக்காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும். (புலிகளின் தலைவர் 2000)
“நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழர் தாயகம் பெருமை கொள்கிறது.
மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின்
அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், தமிழர்கள் தங்களுக்காக ஈகம் புரிந்த பிள்ளைகளின் தரிசனத்தைக் காண்கின்றார்கள்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச்செல்லும்
ஒரு அதிசயக்காட்சி ஒவ்வொரு தமிழர் மனத்திரையிலும் திடீரென தோன்றி மறையும். (சிறியர் 2016)
“மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன்.
தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது
தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக்
கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான
இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு
புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக
விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.” (புலிகளின் தலைவர் 1997)
“மாவீரர்களைப் புனிதர்களாகவே தமிழர்கள் கௌரவிக்கிறார்கள். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான
பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்.
அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள். இதனை ஒரு புனிதமான துறவறமாகவே தமிழர்கள் கருதுகிறார்கள். இந்தப் புனிதத்
துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை தமிழர்கள் புனிதர்களாகவே பூசிக்கிறார்கள்.” (சிறியர் 2016)
“எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது.
இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள்
எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது
போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது. இந்த மாவீரர்கள்
காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை
எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக,
பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக
எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி
அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக
வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக
வாழ்பவன். சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம்
என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன். எனவே,
விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர
நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில்
ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே
அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப்
பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.”
(புலிகளின் தலைவர் 1990 மாவீரர் தின உரை)

“தமிழர்களின் வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின்
இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள்
அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக,
தமிழர் போராட்டத்தின் உயிர்மூச்சாக தமிழர்களின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக
அமைந்துவிட்டது. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்:
எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்.
எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள
இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி.
ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன்.
மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுய நலமற்ற, பற்றற்ற அவனது
வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது
உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன். எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப்
பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர
நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில்
ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே
அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப்
பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.” (சிறியர்
2016)1235

(நன்றி – பிரபாகரன் உரை ஆதாரங்கள் – தமிழ் கிங்டம்,
நன்றி – சிறிதரன் காணொளி உரை – தமிழ்வின்)